Wednesday, December 30, 2009

விஜய் டி.வி அழைப்பு கமல் மீண்டும் சம்மதம்!


கலைஞானி கமல்ஹாசனுக்கு விழா எடுத்து கவுரவித்தது விஜய் டி.வி. ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும் கலந்து கொண்ட இந்த விழா, சின்னத்திரை ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்தது.

தமிழ் திரையுலகில் நடிக்க வந்து ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்த கமலுக்கு பொன்விழா நடத்திய விஜய் டிவி, அதன் மூலம் தனது உயரத்தை இன்னும் சில அங்குலம் வளர்த்துக் கொண்டது.

'காலங்களில் அவள் வசந்தம் மாதிரி, கலைகளில் அவர் கமல்ஹாசன்' என்ற பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த விஜய் டிவிக்கு கைமாறாக ஏதாவது செய்து தனது நன்றியை தெரிவிக்க நினைத்தாராம் கமல். "என்ன வேணுமோ கேளுங்க...?" என்று அவர் சொல்ல, விஜய் டி.வி கேட்டதுதான் விசேஷம்!

"நீங்களே பங்குபெரும் ஷோ ஒன்றை ஏற்பாடு செய்கிறோம். அதில் உங்களின் முழுமையான பங்களிப்பு வேண்டும்" இதுதான் விஜய் டி.வி கேட்ட விஷயம். அதாவது இந்தியில் அமிதாப் செய்தாரே கோடீஸ்வரன் நிகழ்ச்சி! அது மாதிரி ஒரு ஷோ. முதலில் யோசித்த கமல், தற்போது அதற்கும் ஓ.கே சொல்லியிருக்கிறாராம். நடிகர்களில் உலக ஞானம் பெற்றவர் கமல் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். இப்போது அவர் நடத்தப் போகும் ஷோ, அதை இன்னும் தெளிவுபடுத்தும் என்பது மட்டும் நிச்சயம்!

ஜெனிலியாவின் கதை மூக்கை சிந்தும் தனுஷ்


ஒரு கைக்குட்டை மாதிரியே 'கச்சிதமாக' இருப்பவர் ஜெனிலியா. ஆனால் இந்த கைக்குட்டைக்கு ஆசைப்பட்டு வேறொரு கைக்குட்டையால் மூக்கு சிந்த வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார் தனுஷ்.

"நம்ம படத்துக்கு யாருங்க ஹீரோயின்?" இப்போதெல்லாம் தன்னுடன் டூயட் பாடப் போகும் அழகிகளை டிசைட் செய்வது ஹீரோக்கள்தானே? இந்த எண்ணத்தில் தனுஷிடம் டைரக்டர் கேட்டபோது அவர் கைகாட்டிய அழகிதான் ஜெனிலியா. தெலுங்கு படம் ஒன்றின் ரீமேக்கை கையாள்வது யாரடி நீ மோகினி, குட்டி பட இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர்.

தனுஷ் ஆசைப்பட்ட மாதிரியே ஜெனிலியாவை அழைத்து வந்துவிட்டார்கள். வந்த இடத்தில் அப்படி இப்படி இருந்தால்தானே இன்ட்ரஸ்ட்? ஆனால் ஜெனிலியாவோ செல்போனும் காதுமாக செட்டில் ஆகிவிடுகிறாராம். ஒட்டுக் கேட்கிற வழக்கம் ஒருவருக்கும் இல்லையென்றாலும், எதிர்முனை கிளுகிளு பார்ட்டி யார் என்பதை இரண்டே நாட்களில் கண்டுபிடித்துவிட்டாராம் தனுஷ்.

அவர்? பிரபல பாலிவுட் ஹீரோ ரித்தீஷ் தேஷ்முக்!

ஜெனிலியாவுக்கும் இவருக்கும் காதல் என்பதும், இருவர் காதலுக்கும் வீட்டில் பலத்த எதிர்ப்பு என்பதும் ஜெனிலியா சொல்லிதான் தனுஷ§க்கே தெரியுமாம். (மும்பை பத்திரிகைகளில் கொட்டை எழுத்தில் குமுறியிருந்தாங்களே... தெரியாதோ?)



பக்கத்திலேயே நெருப்பு. இருந்தாலும், தம்மடிக்க ஃபயர் கிடைக்காமல் தள்ளாடுறாராம் தனுஷ்!!!!!!!



பொங்கலுக்கு மோதப்போகும் படங்கள்

சினிமா ரசிகர்களுக்கு இந்தப் பொங்கல் தித்திப்பான பொங்கலாக அமையவிருக்கிறது. ஆனால் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் பாவம்... அவர்களுக்கு எந்தப் படமும் இல்லை.

பொங்கல் ரேஸில் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கோவா’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘ஜக்குபாய்’, ‘குட்டி’ ஆகிய படங்கள் மோதுகின்றன. இந்த படங்கள் அத்தனையும் ஒன்றுக்கொன்று சளைக்காதவை என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம்.

‘கோவா’ படத்தை வெங்கட்பிரபு இயக்கியிருக்கிறார் ‘சரோஜா’ டீம் நடித்துள்ளது. எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள விஷால் நடித்து வெளிவரும் படம் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’. ‘ஜக்குபாய்’ சரத்குமார் - ஸ்ரேயா நடித்துள்ள படம். தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வரும் தனுஷ் நடித்து வெளிவரும் படம் ‘குட்டி’. இந்தப் படங்களில் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கோவா’ ஆகிய இரண்டு படங்களும்தான் எதிர்பார்ப்பில் இருக்கின்றன.

தனுஷின் ‘குட்டி’ படம் எப்படி இருந்தாலும் ஓடிவிடும்.. காரணம் தொடர்ந்து வரும் தனுஷின் வெற்றி, இது மட்டுமின்றி இந்தப் படத்தை வெளியிடுவது சன் பிக்சர்ஸ். பின்னே கேட்கவா வேண்டும். ஆயிரத்தில் ஒருவனுக்கும் கோவாவுக்கும்தான் பெரும் போட்டி நடக்கும் என்று தெரிகிறது.