Thursday, December 24, 2009

விஜய்-சூர்யா... ஒரு வில்லங்க மோதல்!

சிறுத்தையை வேட்டையாடுவதுதானே வேட்டைக்காரனின் வேலை? ஆனால் சினிமா சிறுத்தையை அதே சினிமா வேட்டைக்காரன் கொன்று விட்டானே... என்று புலம்பல் சத்தம் கேட்கிறது கோடம்பாக்கத்தில்.

அரசல் புரசலாக ஆரம்பித்தாலும் நேரடியாக மேட்டருக்கு வருவோம். 'சிறுத்தை' என்ற படத்தை கார்த்தி, சூர்யா சகோதரர்களின் உறவினரான ஞானவேல் என்பவர் தயாரிக்க முடிவானது. இவர்தான் 'பருத்தி வீரன்' பட தயாரிப்பாளர். இதற்காக 'விக்கிரமார்குடு' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ரைட்சை வாங்கி வைத்திருந்தார்களாம் இவர்கள்.

'வேட்டைக்காரன்' படத்தை மற்றவர்களை போலவே ஆர்வமாக பார்க்க கிளம்பிய சகோதரர்களுக்கு ஆத்திரமான ஆத்திரமாம். வேட்டைக்காரனில் வந்த பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் 'விக்கிரமார்குடு' படத்தின் சீன்களை தழுவி அமைக்கப்பட்டுள்ளதாம். இப்படி படத்திலுள்ள சரக்கையெல்லாம் உருவி விட்டால் மிச்சத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதாம்? இதுதான் சகோதரர்களின் கோபத்திற்கு காரணம்.
இப்படி 'உருவி' கதை பண்ணிய இயக்குனரை விட்டு விட்டு விஜய்யை குறை சொல்வானேன்? என்று இன்னொரு புறம் சமாதானம் செய்து கொண்டார்களாம் அதே அண்ணன் தம்பிகள். சினிமா கோபம் சில நிமிடங்கள்தானே நீடிக்கும்...

நமீதாவின் தெலுங்கு படம்


தமிழில் நடிப்பதை விட தெலுங்கில் அள்ளிக் கொடுப்பார்கள் என்று நினைத்த நமீதா சமீபத்தில் ஓசைப்படாமல் தெலுங்கு படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் தமிழுக்கும் வருகிறது, ‘இதுதாண்டா சட்டம்’ என்னும் பெயரில். பணபலம் அதிகார பலம் கொண்ட ராமசாமி ரெட்டி, தன்னம்பிக்கை, தைரியம் கொண்ட ராஜசேகர், அவரை பிடித்தே தீருவேன் என்று அலையும் போலீஸ் அதிகாரியான தம்பி... கவர்ச்சி புயல் நமீதா இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களாகப் பின்னப்பட்டுள்ளது இந்தப் படத்தின் கதை.

கோடி ராமகிருஷ்ணா எழுதி இயக்குகிறார். ராஜசேகர் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நமீதா களம் இறங்கியுள்ளார். இவர்களுடன் நாசர், ரியாஸ்கான், கே.ஆர்.விஜயா, தலைவாசல் விஜய், ராமிரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான கோடி இராமகிருஷ்ணாவின் அடுத்த இயக்கத்தில் பிரமாண்ட தயாரிப்பாக வெளிவருகிறது இந்த படம்.

தமிழில் நடிப்பதை விட, தெலுங்கில் எக்கச்சக்க கவர்ச்சி மழை பொழிந்துள்ளாராம் நமீதா.

Wednesday, December 23, 2009

வேட்டைக்காரன் மெகா ஹிட்


சன் பிக்ஸர்ஸ் சார்பில் வெளியான வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய, வர்ணிக்க முடியாத அளவு, மெகா வெற்றிப் படமாக அமைந்துள்ளதாகவும், இப்படி ஒரு வெற்றிப் படம் தந்ததற்காக ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், கலாநிதி மாறனுக்கும் நன்றி என்று விஜய் கூறினார்.

வேட்டைக்காரன் திரைப்படம் வெள்ளிக் கிழமை வெளியானது. விமர்சகர்கள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் இது பெரும் வெற்றிப் படம் என்று தயாரிப்பாளர், வெளியீட்டாளரான சன் பிக்ஸர்ஸ் மற்றும் நடிகர் விஜய் தரப்பில் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று சன் பிக்ஸர்ஸ் அதிபர் கலாநிதி மாறன் வீட்டுக்கு நடிகர் விஜய்யும் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரனும் விசிட் அடித்தனர்.

கலாநிதி மாறனுக்கு பூங்கொத்து கொடுத்து, "இப்படியொரு பிரமாண்ட வெற்றிப் படம் அமையக் காரணமாக இருந்ததற்கு நன்றி" என்று கூறினார் விஜய்.

பின்னர் அளித்த பேட்டியில், "வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய மெகா வெற்றிப்படமாக அமைந்துள்ளது. என்னுடைய சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் என் மகனின் ஆசையை நிறைவேற்றி விட்டேன். இனி அவர் தனது படிப்பை கவனிக்க வேண்டும். நடிப்பு அப்புறம்தான்.

இந்த சந்தோஷமான நேரத்தில், படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், சன் டிவிக்கும், கலாநிதி மாறனுக்கும் மீண்டும் நன்றி சொல்கிறேன்" என்றார்.



Tuesday, December 22, 2009

கண்டேன் காதலை கொண்டாட்டம்


பரத், தமன்னா நடிப்பில் வெளியான கண்டேன் காதலை படம் 50 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.. முன்பெல்லாம் 100 நாட்களைத் தொட்டால்தான் விழா கொண்டாடுவார்கள்.

ஆனால் இன்றைய நிலையில் பத்து நாட்கள் ஓடினாலே விழா கொண்டாட வேண்டும் போலிருக்கிறது. கண்டேன் காதலை டீம் 50வது நாளை கொண்டாடியிருக்கிறது. வெளியிட்ட இடங்களில் எல்லாம் வெற்றிகரமாக இந்த படம் ஓடிக் கொண்டிருப்பதாலேயே இந்த விழா.

சென்னையில் இந்தப் படம் வெளியான 11 தியேட்டர்களிலும் இன்னும் கலெக்க்ஷனில் இடிக்காமல் படம் ஓடிக்கொண்டிருக்கிறதாம். (ஆச்சரியமான விஷயம்தான்.!) கமலா தியேட்டரின் உரிமையாளர் திரு சிதம்பரம் இதற்கு முன்பு வெளியான கந்தசாமி படத்தின் வசூலை இந்தப் படம் முறியடித்துவிட்டதாக சொல்கிறார்.