Friday, December 11, 2009

பாட்டு ஒரே பாட்டு... நயன்தாராவே நிப்பாட்டு!


அட்வைஸ் சொல்றவங்க அப்பால போங்க...” நயன்தாராவின் இந்த துடுக் பேச்சால் நமக்கெதுக்கு என்று ஒதுங்கிக் கொண்டார்கள் அவருக்கு நெருக்கமான அட்வைசர்கள்.

அவிழ்த்து விட்ட கன்னுக்குட்டிக்கு தொட்டின்னு தெரியுமா? பட்டின்னு புரியுமா? துள்ளி ஓடி தொட்டியிலே விழுந்த மாதிரி தப்பு தப்பாக முடிவெடுப்பதாக புலம்புகிறார்கள் அந்த நெருக்கமானவர்கள்.

லேட்டஸ்ட் புலம்பல் இது. “யாரையும் கேட்காமலேயே கோவா படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதிச்சாரு. சரி போகட்டும் என்று விட்டால் இப்போது மீண்டும் ஒரு படம். எப்படிதான் புரியப் போவுதோ” என்கிறார்கள். மாப்பிள்ளை படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்திருக்கிறாராம் நயன்தாரா. “இப்படியே அவரு முக்கியம், இவரு முக்கியம்னு ஆட ஆரம்பிச்சா நயன்தாராவுக்கு போட்டியா ரகசியாதான் வந்து நிப்பாரு” என்று அழாத குறையாக சொல்கிறார்கள் அவர்கள். போகட்டும்... இன்னொரு சங்கதி.

முதல்வர் கையால் வழங்கப்பட்ட கலைமாமணி விருதை வாங்க ஏன் வரவில்லை என்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் நயன். அந்த விருது வழங்கப்பட்ட நாளில் இவர் வெளிநாட்டில் இருந்தாராம். படப்பிடிப்பை விட்டு விட்டு வர இயலாது என்பதால்தான் வராமல் இருந்துவிட்டாராம்.

சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லியாச்சு என்கிறார் அவர். அப்படின்னா சரி...

கலைஞரின் பண்பை வியந்தோம் - ரஜினி, கமல் நெகிழ்ச்சி

ரொம்ப சந்தோஷமான நிகழ்ச்சி இந்த விழாவில் நடந்தது. எனக்கு தெரிந்து எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சேர்ந்து ஒரு பரிசை கலைஞருக்கு கொடுத்து இருக்க மாட்டார்கள்.

சிவாஜி - தி பாஸ் படத்துக்காக 2007ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற ரஜினி தனது ஏற்புரையில் கூறியதாவது-

"ரொம்ப சந்தோஷமான நிகழ்ச்சி இந்த விழாவில் நடந்தது. எனக்கு தெரிந்து எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சேர்ந்து ஒரு பரிசை கலைஞருக்கு கொடுத்து இருக்க மாட்டார்கள். அந்த வாய்ப்பு எனக்கும், கமலுக்கும் கிடைத்தது மிகப் பெரிய பாக்கியம். 'உடல் நலக்குறைவாக இருந்ததால், கொஞ்சம் தூங்கி விட்டேன். சற்று தாமதமாக விழாவுக்கு வருகிறேன்' என்று எங்களிடம் கலைஞர் சொன்னார். அந்த பண்பு, அடக்கத்தை எப்படி சொல்வது?. அய்யா நீங்க நல்லாயிருக்கணும். கலைஞர் எத்தனை மேடுகள், சிகரங்களைப் பார்த்தவர்.. எத்தனையோ மேடுகளும், சிகரங்களும் காணாமல் போனதையும் பார்த்திருக்கிறார். அவர் யாரை அணைத்துக் கொண்டாலும் அவர் பெரிய ஆளாகி விடுவார். அதேபோல் அவர் யாரை தள்ளினாலும் பெரிய ஆளாகி விடுவார்கள். இல்லையென்றால், சாய் பாபா அவருடைய வீட்டுக்கு வந்திருக்க மாட்டார்.

'சிவாஜி' படத்துக்காக, கலைஞர் கையினால் பரிசு பெற்றது, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த படத்தை தயாரித்த ஏவி.எம்.சரவணனுக்கு என் மனமார்ந்த நன்றி. படத்தை இயக்கிய ஷங்கருக்கு என் மனமார்ந்த நன்றி. நான் திரையுலகுக்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. கதாநாயகன் ஆகி 32 வருடங்கள் ஆச்சு. என்னை கதாநாயகனாக போட்டு படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கும், டைரக்டர்களுக்கும், என்னை ஏற்றுக்கொண்டு என் படங்களை ரசித்த ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..." என்றார் ரஜினி.

தசாவதாரம் படத்துக்காக 2008-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற கமல்ஹாசன் கூறியதாவது-

"இந்த ஏற்புரையை நான் சொல்வேன் என எதிர்பார்க்கவில்லை. எதுவும் தெரியாமல் இங்கு வந்தேன். நான் பிறப்பதற்கு முன்னால் எழுதிய வசனங்களை இங்கு சொல்லலாம் என்று வந்தேன். கலைஞர் எழுதிய வசனங்களை நடிகர் திலகம் சிவாஜியிடம் நான் பேசிக் காட்டி இருக்கிறேன். ஒருமுறை கூட கலைஞர் முன்பு பேசிக் காட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று இங்கே வடிவேல் படித்த வாழ்த்து பாடலில், கலைஞர் நடந்து சென்ற பாதையில் ஏற்படும் புழுதியில் புரள்வேன் என்று ஒரு வரி இருந்தது. கலைஞர் நடந்து சென்று கிளப்பிய புழுதியில் நனைந்தவர்கள், நாங்கள். ஒரு தலைமுறையை தாண்டி கூட, இன்னும் அந்த புழுதியில் குளித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த விழா சரித்திரத்தில் இடம்பெறும். எங்கள் கையினால் உங்களுக்கு விருது வழங்கியதை எங்கள் பேரக் குழந்தைகளிடம் கூட பெருமையோடு சொல்லிக் கொள்வோம். அதற்காக உங்களுக்கு நன்றி சொல்வதா, வாழ்த்துவதா என்று புரியவில்லை. எனக்கும், ரஜினிக்கும் இடையே பொறாமை இல்லை. நாங்கள் பொறாமைப்பட்டது, குஷ்பு தமிழில் பேசியதை பார்த்துதான். கலைஞர் என் பக்கம் திரும்பி, குஷ்பு தமிழில் பேசுவதை பார்த்தாயா? என்று கேட்டார். அந்த அளவுக்கு குஷ்பு தமிழில் பேசி, தனி விருதை தட்டிக்கொண்டு போய்விட்டார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

கலைஞர் உடல் நலக்குறைவு காரணமாக விழாவுக்கு தாமதமாக வருவதாகக் கூறினார். அவர் எங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அப்படி சொன்னது, அவருடைய பண்பு. அந்த பண்பை கண்டு நாங்கள் வியந்தோம். இன்னும் அவரிடம் பாடம் படித்துக் கொண்டிருக்கிறோம். இந்த விழாவை வேகமாக நடத்தி முடிக்க வேண்டியது எங்கள் கடமை. விழாவில் கலந்துகொண்டு விருது வழங்கியதை அவர் கடமை என்று நினைத்து செய்யவில்லை. உரிமை என்று நினைத்து செய்தார். இது, சரித்திரத்தில் இடம்பெறும். இந்த விழாவில் நானும் பங்கு பெற நேர்ந்ததற்காக நன்றி.

ரஜினிக்கு என் வாழ்த்துக்கள். அவர் (எந்திரன்) படத்தை சீக்கிரமே முடித்து வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்..." என்றார் கமல்.

சந்தியாவின் ஆசையோ அலை போலே...


காதல் சந்தியாவுக்கு இப்போது பெரிய பெரிய ஆசைகள் எல்லாம் வருகின்றன போலும். தென்னிந்திய மொழிகள் எதையும் விட்டு வைக்க அவருக்கு இப்போது மனம் இல்லை.

தமிழ் தெலுங்கு மலையாளம் என அத்தனை மொழிகளிலும் ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கதவுகளைத் தட்ட ஆரம்பித்துவிட்டார். இப்போது இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு துறுதுறு பெண் வேடம்.

‘இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் நல்ல பெயரை வாங்கித் தரும்...’ என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சந்தியா. இந்தப் படத்திற்குப் பின்னர் இவர் கையில் இருப்பது ‘ஓடிப்போலாமா’ என்ற படம் மட்டுமே. இவருக்கு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கவேண்டும் என்பது நெடு நாளைய ஆசை. அந்த ஆசை இப்போது சிம்புதேவனால் நிறைவேறப்போகிறது. காரணம் ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ மிகுந்த பொருட் செலவில் உருவாகி வருகிறது.

இந்தப் படம் ஹிட்டாகி விட்டால் அப்புறம் தென்னிந்திய மொழிகளில் எல்லாம் ஒரு கலக்கு கலக்குவேன் என்கிறார் சந்தியா.

Tuesday, December 8, 2009

பெண்சிங்கத்தில் கலைஞர் பாடல்

ஜெ. நந்தினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் கலைஞரின் பெண் சிங்கம் படப்பிடிப்பு பொள்ளாச்சி, ஒகேனக்கல் திருமூர்த்திமலை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்றது. கலைஞரின் ஆவேசமான பஞ்ச் வசனங்கள் பிரமிக்க வைத்துள்ளது.

இசையமைப்பாளர் தேவாவின் இசைக்கு தகுந்தாற்போல் ஆகா வீணையில் எழுவது வேணுகானமா? என்ற டூயட் பாடலை கலைஞர் பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் அருமையாக வந்துள்ளது.

கவிஞர் பாரதிதாசன் எழுதிய பாடலும் வாலி, வைரமுத்து, பா.விஜய் ஆகியோரின் பாடல்களும் இப்படத்தில் இனிமையாக உள்ளன. நடிகர் உதய்கிரண், மீரா ஜாஸ்மின், விவேக், ராதாரவி, வாகை சந்திரசேகர், ரோகிணி, ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். நடிகர் அஜீத்தின் மைத்துனர் ரிச்சட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கொல்கத்தா புதுவரவு சுதர்சனா சென் நடிக்கிறார்.

ஆணாதிக்கத்தை எதிர்த்து நின்று சதி வலையை முறியடித்து சாதனை புரியும் ஐ.பி.எஸ். அதிகாரி வேடத்தில் மீராஜாஸ்மின் நடிக்கும் இப்படத்தை பாலிஸ்ரீரெங்கம் இயக்குகிறார். ஜெ.நந்தினி ஆர்ட்ஸ் சார்பாக ஆறுமுகனேரி எஸ்.பி.முருகேசன் தயாரிக்கிறார்.

ஹாலிவுட் ‌‌ரீமே‌க்கில் கேப்டன்?

விருதகி‌ரி படத்தை சத்தமில்லாமல் சைதாப்பேட்டையில் தொடங்கியிருக்கிறார் விஜயகாந்த். அவரே இயக்கி நடிக்கும் முதல் படம் என்பதால் அவரது தொண்டர்கள் மத்தியில் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு.

விஜயகாந்துக்கு வெற்றிகளை தேடித் தந்த போலீஸ் அதிகா‌ரி வேடம்தான் இதிலும். ‌சின்ன வித்தியாசம், இதில் நாடு நாடாக பறந்து வில்லனை துரத்திப் பிடிக்கிறார்.

விருதகி‌ரி ஹாலிவுட்டில் வெளியான டேக்கன் படத்தின் ‌‌ரீமே‌க் என்கிறார்கள் சிலர். ஆனால் இதில் உண்மையில்லை என்று வாதிடுவோரும் உண்டு.

டேக்கன் படத்தின் ஹீரோ மனைவியை பி‌ரிந்து வாழ்கிறவர். மனைவி இன்னொருவருடன் குடும்பம் நடத்துகிறாள். ஹீரோவின் டீன் ஏ‌ஜ் மகளும் மனைவியின் புதிய கணவருடன் வசிக்கிறாள். இந்நிலையில் பா‌ரிஸுக்கு தனது தோழியுடன் டூர் செல்லும் ஹீரோவின் மகள் இளம் பெண்களை பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் மாட்டிக் கொள்கிறாள்.

இதன் பிறகுதான் கதை சூடு பிடிக்கிறது. அமெ‌ரிக்க உளவு நிறுவனத்தில் ஸ்பெஷல் பயற்சி பெற்ற ஹீரோ மகளை தேடிச் செல்வதுடன், அவளை கடத்திய அனைவரையும் கொன்றொழிக்கிறார். ஹாலிவட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டான இந்த‌க் கதை விஜயகாந்தின் இமேஜுக்கு சற்றும் பொருத்தமில்லாததது என்கிறார்கள் ‌‌ரீமே‌க் என்ற செய்தியை மறுப்பவர்கள்.

நம்பக்கூடியதாக‌த்தான் இருக்கிறது அவர்கள் சொல்வதும்.

அரசியலில் புவனேஸ்வ‌ரி


பாய்ஸ் உள்பட சில படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர் புவனேஸ்வ‌ரி. சில வருடங்களுக்கு முன் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

சமீபத்தில் மீண்டும் போலீஸ் இவரை கைது செய்தது. தனது வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்தார் என்பது குற்றச்சாற்று. புழல் சிறையில் அடைக்கப்பட்ட புவனேஸ்வ‌ரி ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்.

இவரது வக்கீல்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையி‌ல், புவனேஸ்வ‌ரி டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் புவனேஸ்வ‌ரி இணைந்திருப்பதாகவும், அவருக்கு கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சென்னையில் உள்ள சேதுராமனின் அலுவலகத்துக்கு நே‌ரில் சென்ற புவனேஸ்வ‌ரி, சேதுராமனுக்கு மாலை அணிவித்து அவரது முன்னிலையில் கட்சியில் சேர்ந்ததாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

மற்ற நடிகர்களை‌ப் போல, நாட்டை‌க் காப்பாற்ற அரசியலில் சே‌ர்ந்ததாக புவனேஸ்வ‌ரி அறிக்கை ஏதும் இதுவரை விடவில்லை என்பது ஆறுதல். தற்காலிகமாக தமிழகம் தப்பித்திருக்கிறது.