Thursday, December 3, 2009

கருணாஸ் நடிக்கும் பௌர்ணமி நாகம்


யார், யுகா படங்களை எடுத்த இயக்குநர் யார் கண்ணன் இப்போது பொளர்ணமி நாகம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் கருணாஷ் மற்றும் ஆதித்யா மேனன் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க அவர்களுடன் மயில்சாமி, நளினி, நிழல்கள் ரவி, நெல்லை சிவா என ஒரு பெரிய டீமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

இது இப்படி இருக்க இன்னொரு ஹைலைட்டான விஷயம் இந்தப் படத்தில் கவர்ச்சி நடிகை முமைத்தான் இரட்டை வேடங்களில் நடித்து, கெட்ட ஆட்டமும் போட்டிருக்கிறாராம். அதுவும் கருணாசுடன் முமைத்கான் இணைந்து ஆடியிருக்கிறாராம். இதை ஒரு பக்கம், பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லியே பப்ளிசிட்டி தேடிக் கொண்டிருக்கிறார் கருணாஸ். இந்தப் படத்தின் கதை பற்றி யார் கண்ணனிடம் கேட்டால், ‘ஒரே மாதத்தில் ரெண்டு பௌர்ணமி வருகிறது, முதலில் வரும் பௌர்ணமியில் நடக்கும் ஒரு சம்பவத்தின் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்கள் ரசிகர்களை திகிலில் உறைய வைக்கும்...’ என்று பயமுறுத்துகிறார். இந்தப் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் எஸ்.ஏ.ராஜ்குமார்.

தனுஷ் ஜோடியாக ஜெனிலியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்


கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களாவில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்புக்காக சுமார் பத்து லட்சம் செலவில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதன் படப்பிடிப்பை டி.ஆர். வரதராஜன் கேமரா ஸ்விட்ச் ஆன் செய்ய, ராம்குமார் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.

தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ரெடி என்ற படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. பெயரிடப்படாத இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடிக்கிறார். ரெடி தெலுங்குப்படத்திலும் ஜெனிலியாதான் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

175 நாட்கள் ஓடிய யாரடி நீ மோகினி வெற்றிப்படத்தைத் தொடர்ந்து, தற்போது தனுஷ் நடிக்கும் குட்டி படத்தை இயக்கி வரும் மித்ரன் கே.ஜவஹர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக தனுஷ் உடன் இணைகிறார் மித்ரன் கே.ஜவஹர். இதன் மூலம் ஒரே ஹீரோவை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவராகிறார் இவர்.

தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் பாலாஜி ஸ்டூடியோஸ் பிரைவேட் லிட் பேனரில் மோகன் அப்பாராவ், ரமேஷ் தாண்ட்ரா தயாரிக்கிறார்கள்.

சந்திரமுகி, கில்லி, சிவாஜி போன்ற படங்களைப்போல் பல கோடி செலவில் மிகப்பிரம்மாண்டமானமுறையில் இப்படத்தைத் தயாரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. பாடல் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க இருக்கிறார்கள்.

படங்கள் - மீரா ஜஸ்மின்

National award -winning Indian film actress | Meera Jasmine








சிங்கம் திரைல்படத்தில் சூர்யா






படங்கள் - சூர்யா ( soorya photos )





Tuesday, December 1, 2009

எச்.ஐ.வி-எய்ட்ஸ் பாதித்த 1000 குழந்தைகளை தத்தெடுக்கும் கமல்


எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளான 1000 குழந்தைகளை தத்தெடுக்கவிருப்பதாக நடிகர் கமல் ஹாசன் கூறினார்.

இன்று உலக எய்ட்ஸ் தினம். உலக அளவில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோரில் குழந்தைகள் அதிக அளவில் உள்ளனர். அவர்களுக்குத்தான் எச்.ஐ.வி. கிருமி பாதிப்பு வெகு சுலபமாக நடக்கிறது.

தமிழகத்தில் 2,651 குழந்தைகள் இந்த ஆண்டு புதிதாக எச்ஐவி தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர். இப்படிப்பட்ட குழந்தைகள் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது.

இந்த நிலையில், எச்ஐவி, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக பெற்றால்தான் பிள்ளையா? என்ற ஒரு மாத கால பிரசார இயக்கத்தை `பாபுலேஷன் சர்வீசஸ் இன்டர்நேஷனல் என்ற அரசு சார்பற்ற அமைப்பும், ஹலோ எப்.எம். நிறுவனமும் இணைந்து இன்று தொடங்குகின்றன.

இந்த ஒரு மாத காலத்தில், ஹலோ எப்.எம்.மில், எச்.ஐ.வி-எய்ட்ஸ் நோயின் தீமைகளைப் பற்றி நேயர்களுக்கு எடுத்துரைக்கப்படும். அத்துடன், எச்.ஐ.வி-எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை தங்கள் குழந்தைகள் போல கருதி, உதவ முன்வருமாறு பிரசாரம் செய்யப்படும்.

ஒரு குழந்தைக்கு ரூ.750 நன்கொடை அளிக்குமாறு நேயர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும். நேயர்கள் அளிக்கும் ரூ.750 நன்கொடையை வைத்து, அந்த குழந்தையின் பெயரில் சுகாதார காப்பீடு எடுக்கப்படும். இது அக்குழந்தையின் எதிர்காலத்துக்கு பயன்படும்.

இந்த பிரசார இயக்கத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் எச்ஐவி- எய்ட்ஸ் பாதித்த ஆயிரம் குழந்தைகளை தத்து எடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில்,

குழந்தைகள்தான் நமது எதிர்காலம். ஆனால் அவர்களில் சிலர் நம்பிக்கையின்மையின் பிடியில் சிக்கி இருப்பது கவலை அளிக்கிறது. அவர்களுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிப்பது நமது கடமை, பொறுப்பு.

ஆகவே, இந்த பிரசார இயக்கத்துக்கு தலைமை தாங்குவது எனக்கு ஆழ்ந்த திருப்தி அளிக்கிறது. என்னை பின்பற்றி பலரும் இந்த சேவையை செய்வார்கள் என்று நம்புகிறேன்.

என்னை விட சிறந்தவர்களும், வசதியானவர்களும் இருக்கிறார்கள். நான் ஒரு இயக்கத்தை மட்டுமே தொடங்கி இருக்கிறேன் மற்றவர்கள் இதை முன்னெடுத்து செல்வார்கள் என்று நம்புகிறேன்.

இந்த பிரசார இயக்கத்தை தொடங்கி உள்ள ஹலோ எப்.எம்.மையும், பிஎஸ்ஐ அமைப்பையும் பாராட்டுகிறேன் என்றார்.

கிளாமரில் கலக்கும் சங்கீதா


‘பிதாமகன்’ மூலம் இரண்டாவது என்ட்ரி கொடுத்த சங்கீதா அதன் பிறகு ‘உயிர்’, ‘தனம்’ போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்தார். அதன்பிறகு தான் அவருக்கு வாய்ப்புகள் சாரமாரியாக வந்து கொட்ட ஆரம்பித்தன.
இதற்கிடையில் திருமணம் செய்து கொண்டாலும் சங்கீதா தொடர்ந்து கலைச் சேவையில் ஈடுபட்டு வருகிறார். இவர் நடிப்பில் இப்போது வெளிவந்துள்ள படம் ‘நான் அவன் இல்லை 2’. இதில் இவர் அவ்வளவாக கவர்ச்சியாக நடிக்காவிட்டாலும், நடிப்பில் கலக்கியிருக்கிறாராம். இப்போது தெலுங்கில் சங்கீதா நடித்து வரும் ‘ஸ்ரீமதி கல்யாணம்’, ‘குட்டிப் பிசாசு’ ஆகிய இரு படங்களிலும் குடும்பப்பாங்கான வேடங்கள்தான். ‘தனம் மாதிரியான பார்த்தாலே பத்திக் கொள்ளும் படங்களில் இவர் இப்போது நடிப்பதில்லை’ என்று யாரோ வதந்தியைக் கிளப்பி விட்டுவிட்டதில் கடுப்பாகி இருக்கும் சங்கீதா, ‘எனக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வர்றதைப் பார்த்துத் தாங்கிக்காத யாரோ தான் இது மாதிரி எல்லாம் புரளியைக் கிளப்புகிறார்கள். தனம் மாதிரியான படங்களில் நடிக்கமாட்டேன் என்று நான் ஏன் சொல்லவேண்டும்...? நான் ரெடியாகத்தான் இருக்கிறேன். இது போன்ற படங்களில் நடிப்பதற்கு..’ என்கிறார்.

தயாரிப்பாளர்களே... கேட்டுக்கோங்கோ...!!!!!!!!

சினேகா யாரை காதலிக்கிறார்?


நினைவில் நின்ற மலர். தலைப்பிலேயே ரத்தத்தை கசிய விடும் டைட்டில்களுக்கு மத்தியில் ஏ.சி யை ஆன் பண்ணிய மாதிரி குளுகுளு காதல் டைட்டில் வைத்திருக்கிறார்கள் ஒரு படத்திற்கு. அதுவும் வெளிநாட்டில் தயாராகும் தமிழ் படத்திற்கு.

ஏவிஐ மூவி மேக்கர்ஸ் சார்பாக கிரிஸ்டல் ஜெயராஜ் தயாரிக்கும் படம் இது. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்களாம். முக்கோண காதலை மையமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தை சுபாஷ் பொக்காசம் இயக்குகிறார். கதை?

மாடல் அழகியான சினேகா ராமனின் வாழ்வில் குறுக்கிடும் இரு இளைஞர்கள் ரிஷி மற்றும் கான். சாஃப்ட்வேர் என்ஜினியரான கான், வெளிநாட்டிற்கு வேலை தேடிக் செல்கிறார். அங்கே மாடல் அழகியான சினேகாவை சந்திக்கிறார். கண்டதும் காதல்! மெல்ல மெல்ல வளரும் இந்த காதலுக்கு திடீர் சோதனை. விபத்தில் இறக்கிறார் கான். அதிர்ந்து போகும் சினேகா, அவரை மறக்க முடியாமல் தவிக்கிறார்.

ஆனால் ஒரு முறை மட்டுமே மலரக்கூடியதா காதல்? ரிஷியின் வடிவில் மறுபடியும் காதல் வருகிறது சினேகாவுக்கு. இந்த முறை ரிஷியின் குடும்பத்தில் பிரச்சனை பேயாட்டம் போடுகிறது. இதையெல்லாம் மீறி இருவரும் இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ். வழக்கமான முக்கோண காதலை சொன்னாலும், சொல்லியிருக்கும் விதத்தில் சூப்பர்டா போட வைக்கிறார்களாம்.

பி.கு- நிழல்கள் ரவி, கிரேன் மனோகர், அம்பிகா, சபீதா தவிர படத்தில் நடித்திருப்பவர்கள் எல்லாருமே வெளிநாட்டில் வசிக்கும்

Monday, November 30, 2009

ராமன் தேடிய சீதை

full tamil movie raman thediyaseethai

ஈரம் ( free full tamil movie eeram )

ஆதவன் திரைப்பட padalkal

Surya Jyothika baby pictures






MP3 பாடல்கள் - வேட்டைக்காரன் ( Tamil mp3 songs Vettaikaran )


Vettaikaaran (2009)

Actors : Vijai, Anushka, Salim Ghose, Sri Har &, Sri Nath
Director : Babu Sivan
Music Director : Vijay Antony
Producer : AVM Balasubramanian



Click here to download Vettaikaran MP3 Songs

தரவிறக்க இங்கே சொடுக்குக

உலகை வலம்வரப்போகும் யோகி


அமீ‌ரின் ராம், பருத்திவீரன் படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் கலந்து கொண்டு விருதுகளையும் பெற்றது. யோகி துபாய் திரைப்பட விழாவில் விருது போட்டிக்கு தேர்வாகியிருப்பதும் தெ‌ரியும்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக டிசம்ப‌ரில் துபாய் செல்கிறார் அமீர்.

சந்தோஷ செய்தி என்னவென்றால் துபாயுடன் முடிந்துவிடவில்லை யோகியின் உலகப் பயணம். அதுவொரு தொடக்கம். துபாய்க்குப் பிறகு டர்பன் திரைப்பட விழாவிலும் யோகி திரையிடப்படுகிறது. மேலும், புகழ்பெற்ற பெ‌‌ர்லின் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவும் தேர்வாகியுள்ளதாம்.

ஆக, 2010 ல் பாதிநாள் உலகப் பயணம் மேற்கொள்வார் அமீர் என்பது உறுதி. இதனால் ஜெயம் ரவி நடிக்கும் அமீ‌ரின் கண்ணபிரான் படப்பிடிப்பு தாமதமாகும் என தெ‌ரிகிறது.

முடிவுக்கு வரு‌கிறது கோலங்கள்


ச‌ன் டி‌வி நேய‌ர்களை ஒ‌வ்வொரு நாளு‌ம் பெரு‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌ப்‌பி‌ற்கு‌ள் (எ‌ப்போதுதா‌ன் முடியுமோ?) ஆளா‌க்‌கி வ‌ந்த கோல‌ங்க‌ள் தொட‌ர் ஒரு வ‌ழியாக டிச‌ம்ப‌ர் 4ஆ‌ம் தே‌தியுட‌ன் (வெ‌ள்‌ளி‌க்‌கிழமை) முடிவடை‌கிறது.
தேவயானி நடிப்பில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வ‌ந்த கோல‌ங்க‌ள் தொட‌ர், ப‌ல்வேறு ‌திரு‌ப்பு முனைகளுட‌ன் ‌மிகவு‌ம் ‌விறு‌விறு‌ப்பாக(??) செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது. கட‌ந்த வார‌த்‌தி‌ல் தேவயா‌னியை ‌மிகவு‌ம் தொ‌ல்லை கொடு‌த்து வ‌ந்த ‌வி‌ல்ல‌ன் கேர‌க்ட‌ர், சுய ‌நினை‌வை இழ‌ந்த ‌நிலை‌க்கு‌ச் செ‌ன்ற‌தி‌ல் ஒருவாராக தேவயா‌னி‌க்கு ந‌ல்லது நட‌ந்ததாக தொட‌ர் முடி‌ந்து‌ள்ளது.

அதையடு‌த்து அடு‌க்கடு‌க்காக அவரு‌க்கு ந‌ல்லது நட‌க்கு‌ம் எ‌ன்று வரு‌ம் வார‌த்‌தி‌ல் கா‌ட்ட‌ப்ப‌ட்டு ஒரு வ‌ழியாக இ‌ன்னு‌ம் 1 வார‌த்‌தி‌ல் கோல‌ங்க‌ள் முடி‌கிறது.

கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம், தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் புதிய தொடரை இயக்குகிறார். இந்த தொடரில் தேவயானி நடிப்பாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இதனா‌ல் கோல‌ங்களு‌க்கு‌ள் ‌சி‌க்‌கி‌க் கொ‌ண்டிரு‌ந்த ‌சில நேய‌ர்க‌ள் 4ஆ‌ம் தே‌தி முத‌ல் ‌விடு‌வி‌க்க‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்றே‌க் கூற வே‌ண்டு‌ம்‌.