விருதகிரி படத்தை சத்தமில்லாமல் சைதாப்பேட்டையில் தொடங்கியிருக்கிறார் விஜயகாந்த். அவரே இயக்கி நடிக்கும் முதல் படம் என்பதால் அவரது தொண்டர்கள் மத்தியில் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு.
விஜயகாந்துக்கு வெற்றிகளை தேடித் தந்த போலீஸ் அதிகாரி வேடம்தான் இதிலும். சின்ன வித்தியாசம், இதில் நாடு நாடாக பறந்து வில்லனை துரத்திப் பிடிக்கிறார்.
விருதகிரி ஹாலிவுட்டில் வெளியான டேக்கன் படத்தின் ரீமேக் என்கிறார்கள் சிலர். ஆனால் இதில் உண்மையில்லை என்று வாதிடுவோரும் உண்டு.
டேக்கன் படத்தின் ஹீரோ மனைவியை பிரிந்து வாழ்கிறவர். மனைவி இன்னொருவருடன் குடும்பம் நடத்துகிறாள். ஹீரோவின் டீன் ஏஜ் மகளும் மனைவியின் புதிய கணவருடன் வசிக்கிறாள். இந்நிலையில் பாரிஸுக்கு தனது தோழியுடன் டூர் செல்லும் ஹீரோவின் மகள் இளம் பெண்களை பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் மாட்டிக் கொள்கிறாள்.
இதன் பிறகுதான் கதை சூடு பிடிக்கிறது. அமெரிக்க உளவு நிறுவனத்தில் ஸ்பெஷல் பயற்சி பெற்ற ஹீரோ மகளை தேடிச் செல்வதுடன், அவளை கடத்திய அனைவரையும் கொன்றொழிக்கிறார். ஹாலிவட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டான இந்தக் கதை விஜயகாந்தின் இமேஜுக்கு சற்றும் பொருத்தமில்லாததது என்கிறார்கள் ரீமேக் என்ற செய்தியை மறுப்பவர்கள்.
நம்பக்கூடியதாகத்தான் இருக்கிறது அவர்கள் சொல்வதும்.


0 comments:
Post a Comment