Friday, December 11, 2009

சந்தியாவின் ஆசையோ அலை போலே...


காதல் சந்தியாவுக்கு இப்போது பெரிய பெரிய ஆசைகள் எல்லாம் வருகின்றன போலும். தென்னிந்திய மொழிகள் எதையும் விட்டு வைக்க அவருக்கு இப்போது மனம் இல்லை.

தமிழ் தெலுங்கு மலையாளம் என அத்தனை மொழிகளிலும் ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கதவுகளைத் தட்ட ஆரம்பித்துவிட்டார். இப்போது இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு துறுதுறு பெண் வேடம்.

‘இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் நல்ல பெயரை வாங்கித் தரும்...’ என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சந்தியா. இந்தப் படத்திற்குப் பின்னர் இவர் கையில் இருப்பது ‘ஓடிப்போலாமா’ என்ற படம் மட்டுமே. இவருக்கு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கவேண்டும் என்பது நெடு நாளைய ஆசை. அந்த ஆசை இப்போது சிம்புதேவனால் நிறைவேறப்போகிறது. காரணம் ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ மிகுந்த பொருட் செலவில் உருவாகி வருகிறது.

இந்தப் படம் ஹிட்டாகி விட்டால் அப்புறம் தென்னிந்திய மொழிகளில் எல்லாம் ஒரு கலக்கு கலக்குவேன் என்கிறார் சந்தியா.

0 comments: