Monday, November 30, 2009

உலகை வலம்வரப்போகும் யோகி


அமீ‌ரின் ராம், பருத்திவீரன் படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் கலந்து கொண்டு விருதுகளையும் பெற்றது. யோகி துபாய் திரைப்பட விழாவில் விருது போட்டிக்கு தேர்வாகியிருப்பதும் தெ‌ரியும்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக டிசம்ப‌ரில் துபாய் செல்கிறார் அமீர்.

சந்தோஷ செய்தி என்னவென்றால் துபாயுடன் முடிந்துவிடவில்லை யோகியின் உலகப் பயணம். அதுவொரு தொடக்கம். துபாய்க்குப் பிறகு டர்பன் திரைப்பட விழாவிலும் யோகி திரையிடப்படுகிறது. மேலும், புகழ்பெற்ற பெ‌‌ர்லின் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவும் தேர்வாகியுள்ளதாம்.

ஆக, 2010 ல் பாதிநாள் உலகப் பயணம் மேற்கொள்வார் அமீர் என்பது உறுதி. இதனால் ஜெயம் ரவி நடிக்கும் அமீ‌ரின் கண்ணபிரான் படப்பிடிப்பு தாமதமாகும் என தெ‌ரிகிறது.

0 comments: