
சன் டிவி நேயர்களை ஒவ்வொரு நாளும் பெரும் எதிர்பார்ப்பிற்குள் (எப்போதுதான் முடியுமோ?) ஆளாக்கி வந்த கோலங்கள் தொடர் ஒரு வழியாக டிசம்பர் 4ஆம் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.
தேவயானி நடிப்பில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கோலங்கள் தொடர், பல்வேறு திருப்பு முனைகளுடன் மிகவும் விறுவிறுப்பாக(??) சென்று கொண்டிருந்தது. கடந்த வாரத்தில் தேவயானியை மிகவும் தொல்லை கொடுத்து வந்த வில்லன் கேரக்டர், சுய நினைவை இழந்த நிலைக்குச் சென்றதில் ஒருவாராக தேவயானிக்கு நல்லது நடந்ததாக தொடர் முடிந்துள்ளது.
அதையடுத்து அடுக்கடுக்காக அவருக்கு நல்லது நடக்கும் என்று வரும் வாரத்தில் காட்டப்பட்டு ஒரு வழியாக இன்னும் 1 வாரத்தில் கோலங்கள் முடிகிறது.
கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம், தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் புதிய தொடரை இயக்குகிறார். இந்த தொடரில் தேவயானி நடிப்பாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இதனால் கோலங்களுக்குள் சிக்கிக் கொண்டிருந்த சில நேயர்கள் 4ஆம் தேதி முதல் விடுவிக்கப்படுவார்கள் என்றேக் கூற வேண்டும்.
Monday, November 30, 2009
முடிவுக்கு வருகிறது கோலங்கள்
Labels:
சினிமா செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment