படத்தயாரிப்பில் புதிய வியூகங்களுடன் களமிறங்கியிருக்கிறது சன் நெட்வொர்க். இவர்களின் சன் பிக்சர்ஸ் விநியோகிக்கும் திரைப்படங்கள் - அவை எவ்வளவு மோசமாக இருந்தாலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓட வைக்கும் விளம்பர சூட்சுமம் சன் குழுமத்துக்கு கை வந்திருக்கிறது.
எந்திரன் படத்தை தயாரிப்பதன் மூலம் தமிழ் திரைத்துறையின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாக தன்னை நிலைப்படுத்தியிருக்கிறது சன் பிக்சர்ஸ். எந்திரனைப் போல மேலும் சில மெகா ப்ராஜெக்ட்களை தயாரிக்கும் திட்டமும் சன் பிக்சர்சுக்கு இருக்கிறது.
அதேபோல் சன்னின் பிரமாண்டமும், அவர்களின் விளம்பர யுக்தியும், திட்டமிடலும் ரஜினியையும் கவர்ந்திருக்கிறது. சன் பிக்சர்ஸின் மேலும் சில ப்ராஜெக்ட்களில் இணைந்து பணிபுரிய ரஜினி ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாலிவுட்டைப் போல பிரமாண்ட சம்பளத்துக்கு ரஜினி சன் பிக்சர்சுடன் ஒப்பந்தம் போடுவார் என்பது அவருக்கு நெருக்கமானவர்கள் கசியவிடும் தகவல். எந்திரன் முடிவதற்குள் இந்த அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
Thursday, July 2, 2009
ரஜினியின் சூரிய பார்வை
Labels:
சினிமா செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment