மன்னார் பெரியமடுப்பகுதியூடாக சிறீலங்கா படையினர் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் நான்குமுனைகளின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிநோக்கி ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
கடுமையான எறிகணை மற்றும் ஆட்டிலெறி சூட்டாதரவுடன் பெரியமடு குளகட்டு பகுதியின் இடதுகரையூடாக முன்னகர முற்பட்ட படையினரை கடுமையாக சுமார் 8 மணிநேரத்திற்கு அதிகமாக முன்னகர முடியாமல் விடுதலைப்புலிகள் தாக்குதல்களை தொடுத்திருந்தனர்.
இதேவேளை பெரியமடு குளத்தின் தென்பக்கமாகவும் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றதாகவும் இதனை தடுத்து நிறுத்தி கடுமையாக தாக்குதல்களை தொடுத்துவருவதாகவும் தெரியவருகிறது.
மற்றுமொரு அணியினர் பாலம்பிட்டியில் இருந்து பெரியமடு நோக்கியும் டாங்கிகள் சகிதம் முன்னகர்வினை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இன்னமும் இருமுனைகளில் மோதல்கள் இட்பெற்றுவருவதாகவும் படையினர் பொறிவெடிகளிலும் விடுதலைப்புலிகளின் கடுமையான தாக்குதல்களிலும் சிக்கி பாரிய உயிரிழப்பை சந்தித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
இதேவேளை காயமடைந்துள்ள படையினரை சிறீலங்கா படையினரின் உலங்கு வானுர்திகளில் இருந்து பலதடவைகள் களமுனையினை விட்டு அகற்றும் முயற்சிகளிலும் படையினர் ஈடுபட்டுவருதாகவும் அறியமுடிகிறது.
இதுவரை இடம்பெற்ற மோதல்களில் 20ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. சிறீலங்காப் படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்புகள் காரணமாக சிறீலங்காப் படையினர் தாக்குதல் நவடிக்கைகளை இன்று திங்கட்கிழமை நிறுத்தியுள்ளதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Friday, June 13, 2008
மன்னார் பெரியமடு நோக்கிய படையினரின் ஆக்கிரமிப்பு முறியடிப்பு : 20 படையினர் பல
வவுனியாவில் படையினரின் காவலரண் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
வவுனியா - மதவாச்சி வீதியில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண் மீது இன்று முற்பகல் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
வவுனியா - மதவாச்சி வீதியில் பறையனாலங்குளத்தில் உள்ள காவலரணே இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:45 மணியளவில் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் அதில் இருந்த படையினர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பறையனாலங்குளம் காட்டுப்பகுதி ஊடாக வந்த விடுதலைப் புலிகளின் சிறிய தாக்குதல் அணியே இத்தாக்குதலை ரி-56 ரக துப்பாக்கியால் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தையடுத்து பறையனாலங்குளம் காட்டுப்பகுதியில் தீவிர தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன.
puthinam
எமது காலடியில் சிறிலங்காவின் அனைத்துப் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள்: சி.எழிலன்
சிறிலங்காவின் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள் எல்லாம் எமது காலடியில் வந்து நிற்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.
பரந்தனில் நேற்று நடைபெற்ற வீரமுரசு நிகழ்வில் அவர் ஆற்றிய சிறப்புரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
யாழ்ப்பாணத்தில் தற்போது விடுதலைப் புலிகள் தாக்குதலை தொடுத்து, தரையிறங்குவார்கள் என்ற அச்ச உணர்வில் யாழ். குடா கடல் தொழிலாளர்கள் கடலில் சென்று மீன்பிடிக்க சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது.
அத்துடன் ஊரடங்குச் சட்ட நேரத்தை அதிகரித்து மக்களை சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாக்கி வருகின்றது. யாழ். குடாநாடு மிகவும் மோசமான இறுக்கமான கட்டுக்குள் நேற்றில் இருந்து உள்ளாக்கப்பட்டுள்ளது.
இதனை விட சிறிலங்காவின் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் மக்கள் வரலாறு காணாத அச்ச உணர்வினை சந்தித்துள்ளனர். இவ்வாறான நிலையில் சிறிலங்கா அரசாங்கம், குறிப்பாக சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இன்னும் சற்று தூரம்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அன்று தலைவர் அவர்களை அழித்து விட்டதாக இந்திய அரசு அறிவித்தது. ஆனால் அவரை அவர்களால் நெருங்கவே முடியவில்லை. இதே போன்றதொரு செயற்பாட்டைத்தான் தற்போது சிங்கள மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துக்கொண்டிருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பலம் முன்பிருந்ததைப் போன்று இல்லாமல் தற்போது மேலோங்கித்தான் காணப்படுகின்றது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சிறிலங்காவுக்கான பாடத்தை வெகுவிரையில் புகட்டுவார்.
நாம், இதுவரை பெறாத வெற்றி வாய்ப்பினை இன்று சிறிலங்கா அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கொடுத்திருக்கின்றது. அது எவ்வாறு வந்துள்ளது எனில், சிறிலங்காவின் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள் எல்லாம் எமது காலடியில் வந்து நிற்கின்றன.
உலகின் போராட்டத்தை எடுத்து பார்ப்போமாக இருந்தால், அவர்கள் எப்போது வெற்றி பெற்றார்கள் எனில், ஒரு ஆக்கிரமிப்புப் படை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்குள் எப்போது காலடி எடுத்து வைத்தார்களோ அன்றுதான் அவர்கள் தோல்வியைச் சந்தித்த காலமாக மாறியிருக்கின்றது.
வியட்நாம் விடுதலைப் போராட்டத்தில் வட வியட்நாமில் எப்போது ஆக்கிரமிப்புப் படை சென்றதோ அன்று வியட்நாம் விடுதலைக்கான நாளை குறித்துக்கொண்டது.
எரித்திரியா விடுதலைப் போராட்டத்தில் எரித்திரிய மக்களின் சொந்த இடமான அஸ்மரா பிரதேசத்திற்குள் ஆக்கிரமிப்பாளர்கள் போனபோது தான் எரித்திரியா விடுதலையைப் பெற்றுக்கொள்ளும் நாளாக மாறியது.
அதேபோன்று இன்று தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் கோட்டையான வன்னிக்குள் சிறிலங்காப் படை முழுப் படையினரையும் கொண்டு வந்து விட்டிருப்பது தமிழீழத்திற்கான நாளை குறிப்பதற்கான பலமாக உருவாகியுள்ளது. இதுதான் எமது வெற்றி.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தமிழ் மக்கள் அனைவரும் தவற விடமால் தமிழீழத்தின் வெற்றியை பெற்றெடுக்க தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என்றார் சி.எழிலன்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பிரதேசத்தில் வீரமுரசு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
தேசியப் பணிக்குழு செயலாளர் சபேசன் தலைமையில் பரந்தன் மத்தி விளையாட்டுத்திடலில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் ஏற்றினார்.
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்திற்கு மாவீரர் கப்டன் வீரமணியின் தாயார் சுடர் ஏற்ற, மலர்மாலையினை நாடக உருவாக்குநர் புதுவை அன்பன் சூட்டினார்.
தொடர்ந்து அரங்கத்தில் தமிழ் அரங்க கல்லூரியினரின் இசை நிகழ்வும் கலையருள் கலா மன்றத்தினரின் "ஒரு தாயின் கதை" நாடகம் கலையரசி ஆசிரியரின் நெறியாள்கையில் உருவான "சங்கநாதம்" நிகழ்வும் அரங்கேற்றப்பட்டது.
அரங்க நிகழ்வின் சிறப்புரையினை விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் நிகழ்த்தினார்.
Puthinam.com
யாழில் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை
யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்தவர்களை ஏற்றிச்சென்ற சிறைச்சாலை வாகனத்தை வழிமறித்து இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் வீதியில் சன நடமாட்டம் உள்ள பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் இத்துணிகரச் சம்பவம் இடம்பெற்றது.
இச்சம்பவத்தில் கரவெட்டி இராஜகிராமத்தைச் சேர்ந்த தங்கராஜா சுலோஜன் (வயது 26), செல்வராஜா லெப்டின்ராஜ் (வயது 26) ஆகியோரே கொல்லப்பட்டவர்கள் ஆவர். காயமடைந்தவர் ஜே.ரகுவரன் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட லெப்டின்ராஜின் தந்தையும் தாயும் மற்றும் இரண்டு சகோதரர்களும் சில வாரங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டுள்ளனர். இதனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் லெப்டின்ராஜூம் அவரது சகோதரியும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அடைக்கலம் தேடியிருந்தனர்.
இந்நிலையிலேயே இன்று காலை லெப்டின்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளில் ஒன்றான புன்னாலைக்கட்டுவனுக்குள் ஓடித் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்தவர்கள் யாழ். சிறைச்சாலையில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருந்தவர்களையும் ஏனைய கைதிகளையும் வழக்கு விசாரணைக்காக மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த வழக்கு விசாரணைகளில் முன்னிலைப்படுத்துவதற்காக சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றது.
மேற்படி வாகனம் மல்லாகம் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சில கைதிகளை இறக்கிய பின்னர் சுன்னாகம் - புன்னாலைக்கட்டுவன் ஊடாக பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, புன்னாலைக்கட்டுவனுக்கு அண்மையில் உள்ள பிரதான வீதியில் வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இந்த வாகனத்தை ஆயுதமுனையில் வழிமறித்துள்ளனர்.
வாகனம் நிறுத்தப்பட்டதும் அதில் இருந்தவர்களை கீழே இறங்கி வருமாறு உத்தரவிட்டுள்ளனர். வாகனத்தில் இருந்து கீழ் இறங்கிய அவர்களை நோக்கி துப்பாக்கிதாரிகள் இருவர் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதில் அந்த இடத்திலேயே இருவர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இருவரை சுட்டுக்கொன்று விட்டு வெள்ளை வானை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு உந்துருளி ஒன்றில் துப்பாக்கிதாரிகள் புன்னாலைக்கட்டுவன் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் ஓடித்தப்பினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஆயுததாரிகளின் வெள்ளை வானை சம்பவ இடத்திற்கு வந்த படையினர் எடுத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட இருவரின் சடலங்களும் தெல்லிப்பழை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
மல்லாகம் நீதிபதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
puthinam.com
Wednesday, June 11, 2008
மன்னாரில் கடற்படையினரின் கூட்டுப் படைத்தளம் கடற்புலிகளின் சிறப்பு அணியினரால் அழிப்பு: 10 படையினர் பலி
மன்னார் தீவில் உள்ள எருக்கலம்பிட்டி சிறிலங்கா கடற்படையினரின் கூட்டுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணியினரால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதில் 10 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான படையினர் காயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:
கடந்த மாதம் வீரச்சாவடைந்த கடற்புலிகளின் சிறப்பு இயந்திரப் பொறியியலாளரான லெப். கேணல் கடாபி நினைவாக கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணியினரால் இன்று புதன்கிழமை அதிகாலை 2:08 மணிக்கு எருக்கலம்பிட்டி சிறிலங்கா கடற்படையின் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் தளம் 10 நிமிடத்தில் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணியினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இதில் 10 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவிலான படையினர் காயமடைந்துள்ளனர்.
மன்னார் தீவின் நடுவில் பெரும் பாதுகாப்புக்களின் மத்தியில் எருக்கலம்பிட்டி கடற்படைத்தளம் உள்ளது.
இத்தாக்குதலின் போது
50 கலிபர் துப்பாக்கிகள் - 02
81 மில்லி மீற்றர் மோட்டார்கள் - 02
பிகே எல்எம்ஜி - 02
ஆர்பிஜி-01
60 மில்லிமீற்றர் மோட்டர்கள் - 02
ஏகேஎல்எம்ஜி - 01
ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 03
ராடார் - 01
லோ உள்ளிட்ட பெரும் தொகையான வெடிபொருட்கள் கடற்புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.puthinam
அச்சத்தின் விளிம்பில் சிறிலங்காவின் தென்பகுதி மக்கள்: "த பொட்டம்லைன்" ஏடு
சிறிலங்காவில் இடம்பெற்று வரும் தொடர் தாக்குதல்களால் தென்பகுதியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த பொட்டம்லைன்" தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த வார ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஒவ்வொரு தடவையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் எனது கணவர் பயணம் செய்யும் போதும் அவர் சென்றடைந்த பின்னர் மேற்கொள்ளும் தொலைபேசி அழைப்புக்காக அச்சத்துடன் காத்திருப்பதாக இந்திகா ஜெயவிக்கிரமவின் மனைவி சமிந்திரி தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்று வரும் குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து அவரது பயணம் மிகவும் ஆபத்தானதாக மாறி வருகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மாதம் 10,000 ரூபாயாக உள்ள எனது சம்பளம் எனக்கும் மனைவி, குழந்தைக்கும் மட்டுமே போதுமானது. எனவே நான் பேருந்தில் தான் பயணம் செய்ய முடியும் என இந்திகா ஜெயவிக்கிரம தெரிவித்துள்ளார்.
அரசாங்கம், போரை நிறுத்துவதாக தெரியவில்லை. அது போருக்கு மேலதிக நிதிகளை இறைத்த படி உள்ளது. இந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர்கள் போருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. போரை விரைவாக முடிப்பதற்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முடிவற்ற இந்த போர் நாட்டின் பொருளாதாரத்தை ஏப்பம் விட்டு வருகின்றது. கடந்த மே மாதம் நாட்டின் வாழ்க்கைச் செலவு 26.6 விகிதமாக உயர்ந்திருந்தது. எரிபொருள் விலை 30 விகிதத்தினாலும், பேருந்து கட்டணம் 27.7 விகிதத்தினாலும் உயர்ந்துள்ளது.
பொருளாதார நெருக்கடிகளை விட பாதுகாப்பே எமக்கு முக்கியமானது என தனியார் பேருந்து ஒன்றின் சாரதியான சுதீபா ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்தைச் சூழ்ந்து வரும் ஆபத்துக்களில் இருந்து தன்னைப் பாதுகாப்பதற்கு அவர் தற்போது ஒரு உந்துருளி ஒன்றை வாங்குவதற்கு முடிவெடுத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் இருந்து ஜெயக்கொடி நூலிழையில் உயிர் தப்பியிருந்தார்.
தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அதாவது, தனிப்பட்ட போக்குவரத்துச் சாதனங்களை பயன்படுத்துங்கள், முடிந்தால் ஈருளிகளை வாங்குங்கள் பேருந்துகளில் அல்லது தொடருந்துகளில் பயணம் செய்து ஆபத்தை தேடிக்கொள்ள வேண்டாம் என ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
ஆனால், பொருளாதார ஆய்வாளர் அஞ்சனா கதிர்காமத்தம்பி, பங்குச்சந்தை முகவர் மோகன்தாஸ் தங்கராஜா ஆகியோர் தம்மால் பேருந்துகளில் பயணம் செய்வதை தவிர்க்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
வாடகைக் கார்களில் பயணம் செய்வதற்கு தனது பொருளாதாரம் ஒத்துழைக்காது என அஞ்சனா ஏஎப்ஃபி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
ஓவ்வொரு தடவை நான் பேருந்தில் பயணம் செய்யும் போதும், பேருந்து தரிப்பிடத்தில் நிற்கும் போதும் மக்கள் கூட்டமாக நிற்கும் இடங்களை தவிர்த்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மக்கள் அச்சத்துடன் வாழ்வதுடன், போர் பொருளாதார போராக கூர்மையடைந்துள்ளது. கொழும்பை சுற்றி வாழும் தமிழ் மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
ஒவ்வொரு தடவை தாக்குதல்கள் இடம்பெறும் போதும் அதற்கு அருகில் உள்ள தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்படுவதுடன், அவர்களின் வீடுகளும் தேடுதலுக்கு உள்ளாவது வழமையானதாக மாறிவிட்டதாக தனது பெயரை குறிப்பிட விரும்பாத தமிழ் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வீதிகளில் உள்ள காவலரண்களில் தமிழ் மக்கள் சோதனைக்கு உட்படுவதுடன், வடக்கு - கிழக்குப் பகுதிகளில் இருந்து வந்த மக்கள் சந்தேகத்துடன் பார்க்கப்படுகின்றனர்.
கொழும்பில் பிறந்த நாமும் அவ்வாறே நடத்தப்படுகின்றோம் என்று தமிழ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் 339 படையினர் கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இரு தரப்பினரும் படைத்துறை ரீதியாக பலவீனமாகும் வரையில் மோதல்கள் நிற்கப்போவதில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
puthinam
லண்டனில் சிறிலங்கா அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழத்து விட்டு கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக, லண்டனில் வாழும் தமிழ் மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளனர். |
பிரித்தானியாவின் பிரதமர் கோர்டன் பிறவுண் தலைமையில் 12 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் இரண்டு நாள் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநாடு நடைபெற்ற பொதுநலவாய செயலக மார்ல்பரோ மண்டபம் அமைந்துள்ள பால் மாலில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
மதியம் 12:00 மணிமுதல் பிற்பகல் 3:00 மணிவரை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3,000-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். பல்லின மக்களும் கலந்துகொண்டு சிறிலங்கா அரசுக்கு எதிரான தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்தனர். தமிழ் மக்களுக்கு எதிரான போரை நிறுத்தக் கோரியும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல்கள் நிறுத்தக் கோரியும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள என லண்டனின் பல பாகங்களில் இருந்தும் நகர மத்தியில் கூடிய இப்பெருங்கூட்டம் அந்நாட்டு மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது.
ஆரம்பத்தில் சிறு கூட்டமாக தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில், நேரம் செல்லச் செல்ல மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டு சென்றதால், ஆர்ப்பாட்ட இடத்தில் இருந்து அருகில் உள்ள ட்ரவல்கர் சதுக்கத்திலும் மக்கள் சென்று கூடி தமது ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர். மக்கள் கூட்டம் எதிர்பார்த்ததனை விட அதிகமாக வந்து அலை மோதியதால் ஆர்ப்பாட்டத்துக்கு ஓதுக்கப்பட்ட இடம் காவல்துறையினரால் மேலும் விரிவாக்கப்பட்டு பாதுகாப்பு வேலி விரிவுபடுத்தப்பட்டது. பிரித்தானிய தமிழர் ஒன்றியத்துடன் இணைந்த பிரித்தானிய இளையோர் அமைப்பு, தெற்காசிய ஒற்றுமை அமைப்பு, சமாதானத்துக்கான ஒற்றுமை அமைப்பு, சோசலிச கட்சி, அனைத்துலக சோசலிச அமைப்பு, சிறிலங்கா இடதுசாரி அமைப்பான சமாஜக் கட்சியின் லண்டன் கிளை ஆகிய ஏழு அமைப்புக்கள இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன.
இதே இடத்தில், நேற்று அனைத்துலக மன்னிப்புச் சபை சிறிலங்கா அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தினை நடத்தியிருந்தது. இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அதிகரித்துள்ள வன்முறைகளை கண்டித்த இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. லண்டனில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டின் சிறப்பு அமர்வில் உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம் ஆகியவை உட்பட முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது நடவடிக்கைகள் குறித்து அனைத்துலக நாட்டுத் தலைவர்களுடன் கலந்தாலோசித்தனர். இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அங்கு சென்றிருந்தார்.
|
மே மாதத்தில் 15 பொதுமக்கள் கடத்தல்
இலங்கையில் கடந்த மாதம் 15 பேர் கடத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கண்காணிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த ஆணைக்குழுவின் தலைவரும் மேலக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது:
இக்கடத்தல்கள் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலுமே நடைபெற்றுள்ளன.
காவல்துறையினர் மேற்கொள்ளும் நீதிக்கு புறம்பான கைதுகளால் நகரில் வாழும் தமிழ் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த இரு நாட்களில் இரு பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர். தவராஜா சுதாகரன் நேற்று காலை மட்டக்குளிப் பகுதியில் கடத்தப்பட்டுள்ளதுடன், வத்தளைப் பகுதியில் பெர்ணான்டார்ஸ் என்பவர் கடத்தப்பட்டுள்ளார்.
இக்காலப்பகுதியில் காவல்துறையினரால் கடத்தப்பட்ட 5 பொதுமக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரே அவர்களை விடுதலை செய்துள்ளனர்.
இக்கடத்தல்கள் வெள்ளை வானில் வந்தவர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.
கடத்தல்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக நான் அனைத்துலக சமூகத்துடன் தொடர்புகளை கொண்டிருந்தேன். அவர்கள் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மாற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலகம் விசனம் அடைந்திருப்பதனையே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் இருந்து சிறிலங்கா வெளியேற்றப்பட்ட சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது என்றார் அவர்.
puthinam
அமைதி நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா தயாராக இல்லை: புலித்தேவன் குற்றச்சாட்ட
அமைதி நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் குற்றம் சாட்டியுள்ளார்.
அனைத்துலக ஊடகமான ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசியூடாக இன்று செவ்வாய்க்கிழமை அவர் அளித்த நேர்காணல்:
வடபகுதியில் சிறிலங்காப் படையினரின் அண்மைய முன்நகர்வு நடவடிக்கைகளால் 20,000 தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
சிறிலங்காப் படையினர் பெரும் தொகையான இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஒரு அங்குலம் உள்நுழைந்தால் கூட மேலதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.
வடபகுதி முன்னரங்க நிலைகளில் உக்கிரமான மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. சிறிலங்காப் படையினருக்கு பெருமளவு இழப்புக்களை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம்.
அமைதிப் பேச்சுக்களைப் பொறுத்த வரையில் நாம் முதலில் நோர்வே அனுசரணையாளர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. அவர்கள் என்ன கருதுகின்றனர் என்பதனை நாம் அறிய வேண்டியுள்ளது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அதற்குத் தயாராக இல்லை. அதுதான் பிரச்சினை. நாம் நோர்வேத் தரப்பினருடன் நேரடியாக பேச வேண்டியது முக்கியமானது. ஆனால் நோர்வேத் தரப்பினரை சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க மறுக்கிறது. நோர்வே அனுசரணையாளர்களை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கின்றது.
சிறிலங்காப் படையினரது தொடர்ச்சியான வான்குண்டுத் தாக்குதல்கள் மற்றும் எறிகணை வீச்சுக்களால் மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் பெரும் தொகையான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் எறிகணை மற்றும் மோட்டார்த் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்றார் சீவரத்தினம் புலித்தேவன்.
puthinam
சிறிலங்காவின் இரு மாகாண சபைகள் ஓரே நேரத்தில் கலைப்பு
சிறிலங்கா அரசாங்கம் நேற்று நள்ளிரவு இரண்டு மாகாண சபைகளை ஒரே நேரத்தில் கலைத்துள்ளது.
வட மத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாண சபைகளையே நேற்று நள்ளிரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கலைக்கும் உத்தரவை அரசுத் தலைமை வெளியிட்டுள்ளது.
மேற்படி இரண்டு மாகாண சபைகளையும் கலைக்குமாறு அந்தந்த மாகாண சபை ஆளுநர்களுக்கு அரச தலைமை அறிவித்ததையடுத்தே மாகாண சபைகள் கலைக்கப்பட்டதாக மேற்படி மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
மேற்படி இரண்டு மாகாண சபைகள் கலைக்கப்பட்டமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் கலைக்கப்பட்ட இந்த மாகாண சபைகளுக்கு எதிர்வரும் 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும்.
மேற்படி இரண்டு மாகாண சபைகளும் கலைக்கப்பட்டதையடுத்து அவற்றின் முதலமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை மேற்படி இரண்டு மாகாண சபைகளினதும் காலம் அடுத்த வருடமே முடிவடையும் நிலையில் சுமார் ஒரு வட்டத்திற்கு முன்னதாக அவை கலைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
puthinam
புதிதாக உருவாக்கப்படும் 5 ஆவது படையணி
நான்காம் கட்ட ஈழப்போரை எதிர்கொள்ள புதிதாக நான்கு படையணிகளை அமைத்துள்ள சிறிலங்கா இராணுவம் தற்போது ஐந்தாவது படையணியை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நான்காம் கட்ட ஈழப்போர் தீவிரம் பெற்று வருவதனைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் 57, 58 (Task Force I), 59 ஆவது படையணிகளை உருவாக்கியிருந்தது.
சிறிலங்கா இராணுவம் தற்போது 61 ஆவது படையணியை உருவாக்கிவரும் நிலையில் மேலதிகமாக தாக்குதல் படைப்பிரிவு இரண்டு (Task Force II) என்ற புதிய படையணியை இராணுவம் உருவாக்கி வருகின்றது.
இந்தப் புதிய படையணிக்கு பிரிகேடியர் ரால்ஃப் நுகேரா கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னர் கசவத்தாக்குதல் படையணியின் கட்டளைத் தளபதியாக பணியாற்றி வந்திருந்தார்.
தாக்குதல் படையணியாக உருவாகி வரும் இந்தப் படையணி ஓமந்தை பகுதியில் நிலைகொள்ள உள்ளது.
இதனிடையே உருவாக்கப்பட்டுள்ள 61 ஆவது படையணி தற்காப்பு தாக்குதல் படையணியாக செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
57 ஆவது படையணி கைப்பற்றும் பிரதேசங்களை பாதுகாப்பதற்காக 61 ஆவது படையணி உருவாக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் படையணி இரண்டின் உருவாக்கத்துடன் மணலாறு களமுனைக்கு மேலதிகமாக மற்றுமொரு களமுனை திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
சிறிலங்கா இராணுவத்தைப் பொறுத்த வரையில் மேலதிகமாக உருவாக்கப்படும் இந்தப் படையணிகளுடன், கவசத்தாக்குதல் றெஜிமென்டும் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா இராணுவத்தின் தளபதியாக லெப். ஜெனரல் சரத் பொன்சேகா பதவியேற்ற பின்னர் ஐந்து புதிய படையணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
puthinam
மன்னாரில் சிறிலங்கா கடற்படைப் புலனாய்வாளர் வெட்டிக்கொலை
மன்னார் எமில் நகரில் சிறிலங்கா கடற்படைப் புலனாய்வாளர் ஒருவர் மூன்று நாட்களுக்கு முன்னர் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.
இராசு காந்தன் என்று அழைக்கப்படும் சுரேஸ் அல்லது காந்தன் என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார்.
சிறிலங்கா கடற்படைப் புலனாய்வாளராக செயற்பட்டு வந்த இவர், சுற்றிவளைப்புக்களின் போது காட்டிக்கொடுப்பது உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.
அதிகளவிலான மக்கள் இவரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்களால் இவர் வெட்டிக்கொல்லப்பட்டு எமில் நகர் குளத்துக்குள் போடப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
puthinam
தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழத்து விட்டு கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக, லண்டனில் வாழும் தமிழ் மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளனர்.










