Saturday, May 17, 2008

வவுனியா கைக்குண்டுத் தாக்குதலில் 16 பொதுமக்கள் காயம்

வவுனியா பசார் வீதியில் இன்று முற்பகல் அதிரடிப்படையினரின் கவச வாகனத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 16 பேர் காயமடைந்துள்ளனர். அதிரடிப்படையினரின் வாகனம் சிறிய சேதமடைந்தது.

இன்று சனிக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

மக்கள் நடமாட்டம் பசார் வீதிக்குள் அதிரடிப்படையினர் பயணித்துக் கொண்டிருந்த வாகனத்தை இலக்கு வைத்தே இக்கைக்குண்டு வீசப்பட்ட போதும் அது குறிதவறி வீழ்ந்து வெடித்ததாலேயே இத்தாக்குதலில் பொதுமக்கள் காயமடைந்தனர் என்று அங்குள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த பொதுமக்கள் அனைவரும் வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்களை அனுராதபுரம் மருத்துமனைக்கு அனுப்பியிருப்பதாக வவுனியா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

காயமடைந்தவர்களில் ஒன்பது ஆண்களும் ஆறு பெண்களும் உள்ளடங்குவதாகவும் வவுனியா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இக்கைக்குண்டுத் தாக்குதலை அடுத்து வவுனியா நகரில் பலத்த தேடுதலை அதிரடிப்படையினர் மேற்கொண்டனர். எனினும் எவரும் கைதுசெய்யப்படவில்லை.

உயரமான கட்டடம் ஒன்றில் இருந்தே இக்கைக்குண்டு வீசப்பட்டதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

puthinam

Friday, May 16, 2008

Bomb explosion targets Police bus in Colombo, 9 killed, 85 wounded

TamilNet: "A three-wheeler fitted with a bomb rammed into a bus carrying riot control police commandos, few hundred meters away from the Sri Lankan Presidential Secretariat, Friday noon, killing at least 9 persons, 7 policemen and 2 civilians, and injuring more than 50 policemen and 35 civilians. The explosion has taken place on Lotus Road inside the High Security area near the Hilton Hotel. 12 wounded policemen were in critical condition, according to medical sources in Colombo hospital."

கொழும்பு நகர மத்தியில் குண்டுத்தாக்குதல்: 7 காவல்துறையினர் உட்பட 9 பேர் பலி- 95 பேர் காயம்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அண்மையில் ஹில்டன் விடுதிக்கு முன்பாக உள்ள வான்படையினரின் சோதனை நிலையம் அமைந்துள்ள பகுதியில் கலகத்தடுப்பு காவல்துறையினரை ஏற்றிச்சென்ற பேருந்து தொடரணியை இலக்கு வைத்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.05 மணிக்கு தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதலில் 7 காவல்துறையினர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 95 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் அமைச்சர் காமினி லொக்குகேயின் வாகனச் சாரதியும் கொல்லப்பட்டுள்ளார்.

மருதானையில் இன்று பிற்பகல் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்ட இடத்திற்கு சென்று கொண்டிருந்த காவல்துறையினரை ஏற்றிச்சென்ற பேருந்து தொடரணி மீது முச்சக்கர வாகனம் ஒன்று மோதியதனை அடுத்தே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும் கொல்லப்பட்டவர்களில் 7 பேர் காவல்துறை அதிகாரிகள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்தில் பலர் காயமடைந்து வீழ்ந்து கிடந்தனர் என்று சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.

குண்டுவெடித்த பகுதி பிரமுகர்களின் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாகும். குண்டுவெடித்த பகுதியில் பதற்றநிலை காணப்படுவதாகவும் அப்பகுதியில் படையினரும், வான்படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இக் குண்டுத்தாக்குதல் குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளதாவது:

புறக்கோட்டை சம்போதி விகாரையை அண்மித்துள்ள பகுதியில் பிற்பகல் 12:00 மணிக்கு இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சேத விபரங்கள் உடன் தெரியவரவில்லை என்றார்.

சம்பவத்தில் காயமடைந்த 95 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனைப் பணிப்பாளர் அனில் வியஜசிங்க தெரிவித்தார்.



காயமடைந்தவர்களில் 30 காவல்துறையினரும் 3 படையினரும் அடங்குவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயர்பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்தில் சிதறிய நிலையில் முச்சக்கர வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் காணப்படுகின்றது. இதனை விட காவல்துறையினரின் பேருந்துகள் இரண்டும், பார ஊர்தி ஒன்றும் மேலும் சில முச்சக்கர வாகனங்களும் கடுமையாகச் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட உந்துருளி ஒன்றின் இலக்கத்தகடும் அப்பகுதியில் வீழ்ந்து கிடந்தது. EP 3875 என்ற இலக்கத்தகடே அப்பகுதியில் காணப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் செல்ல சுமார் ஒரு மணிநேரம் வரை ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அப்பகுதியில் நூற்றுக்கணக்கான படையினரும், காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற இடம் அரச தலைவர் மாளிகையை அண்மித்துள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள்: சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

puthinam

தண்ணீர் தேசம் - கருத்துக்களம்

தண்ணீர் தேசம் - கருத்துக்களம்: "தண்ணீர் தேசம் -I
கவிஞர் வைரமுத்து"

Thursday, May 15, 2008

எதிரியைப் பிரிக்கும் தந்திரம்

..:: Uthayan 1:: A Tamil Newspaper from Jaffna - Srilanka ::..: "அரசியலில் எதிர்த்தரப்பை சகுனி வேலை செய்து, பிளப்பதன் மூலம் தனது அதிகாரத்தையும், செல்வாக்கையும் ஒருவாறு தக்கவைத்து வந்த ஆட்சித் தரப்பு, இப்போது அந்தப் பிளவுபடுத்தல் தந்திரோபாயத்தின் உச்சமான நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலைக்க�"

வன்னிப்போரின் செல்நெறி கண்டு குழம்பிப்போயுள்ள சிங்கள ஆட்சியாளர்கள்: "விடுதலைப் புலிகள்"

வன்னிப்போரின் செல்நெறி கண்டு சிங்கள ஆட்சியாளர்கள் குழம்பிப்போயுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்தபடி படைத்தலைமையின் படையெடுப்பு வியூகங்கள் பயன்கொடுக்கவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி ஏடான "விடுதலைப் புலிகள்" ஏடு தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (09.05.08) வெளிவந்த "விடுதலைப் புலிகள்" ஏட்டின் 141 ஆவது இதழின் முகப்புச் செய்தி:

வன்னிப்போரின் செல்நெறி கண்டு சிங்கள ஆட்சியாளர்கள் குழம்பிப்போயுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்தபடி படைத்தலைமையின் படையெடுப்பு வியூகங்கள் பயன்கொடுக்கவில்லை.

வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழர் சேனைக்கும்- சிங்களப் படைக்கும் இடையில் நடக்கும் பலப்பரீட்சையில் புலிகளின் கை மேலோங்கத் தொடங்கிவிட்டது என்று இராணுவ ஆய்வாளர்கள் கருத்துக்கூறத் தொடங்கிவிட்டனர்.

புலிகளின் பலம்- பலவீனம் என்பவற்றை ஆராய்ந்து புலிகளைத் தோற்கடிக்கக்கூடிய இராணுவத் திட்டம் ஒன்றைத் தாம் வெற்றிகரமாக வரைந்து விட்டதாகவே சிங்களத் தரப்பு நினைத்திருந்தது. அந்த நம்பிக்கையிலேயே வன்னிப்போரின் முடிவு தொடர்பாக காலக்கெடுக்களையும் பகிரங்கமாக அறிவித்து படை செருக்கடைந்திருந்தது.

"ஜெயசிக்குறு" படை நடவடிக்கை தோல்வியில் முடிந்ததற்கான காரணிகளை ஆராய்ந்து அதிலிருந்து பாடங்கள் படித்த நிலையில் ஒரு புதிய படைநகர்வு வியூகத்தைச் சிங்களப் படைத் தலைமை கண்டுபிடித்திருந்தது.

பெரும் எண்ணிக்கையான படையினரையும்- பிரமாண்டமான சூட்டுவலுவையும்- வரையறுக்கப்பட்ட குறுகிய களமுனையில் பயன்படுத்தி - எதிர்ப்படும் அனைத்தையும் அழித்தொழித்துக்கொண்டு செல்லும் புல்டோசர் நகர்வுத் திட்டத்தை ஜெயசிக்குறு நடவடிக்கையில் படையினர் பயன்படுத்தியிருந்தனர். விரைவான நில ஆக்கிரமிப்புத்தான் இந்தப் போர்த்திட்டத்தின் நோக்கம். ஆயினும், அந்த நெருப்பு மழைக்குள்ளும் நின்றுபிடித்து வீரம் காட்டி- வியூகம் வகுத்து ஜெயசிக்குறு பூதத்தைப் புலிகள் கொன்று- வென்றனர்.

பெயர் சூட்டப்படாது படையினர் செய்யும் தற்போதைய வன்னிப் படையெடுப்பில் இன்னொரு வகையான படையெடுப்புத் தந்திரத்தைப் படையினர் கைக்கொள்கின்றனர்.

பரந்த முன்னரங்கில் போர் அரங்கைத் திறந்து சிறிய சிறிய குழுக்களாகப் படையினரைப் பிரித்து- நாள்தோறும் சிறுசிறு சண்டைகளை அங்கெல்லாம் நடாத்தி- மெதுமெதுவாக நிலம் விழுங்கப் படையினர் முனைகின்றனர். இந்தச் சண்டைத் தந்திரத்தின் பிரதான நோக்கம் இயன்றளவு புலிகளைக் கொல்வது தான்.

கடந்த ஒன்றரை வருடகால மாக வன்னிப் போரரங்கின் மேற்கு (மன்னார்) மற்றும் கிழக்கு (மணலாறு) முனைகளில் இவ்வாறான தொரு படைநகர்வுத் திட்டத்தையே பெரும்பாலும், அவர்கள் கைக்கொள்கின்றனர்.

ஆனால், எதிர்ச் சமர்புரிந்து வீரச்சாவடையும் புலிகளை விட மிக அதிகளவில் படையினர் கொல்லப்படுகின்றனர். நில ஆக்கிரமிப்பிலும் வெற்றிபெற முடியாமல் அதேவேளை பெருமளவு படையினரையும் இழந்து படைத்தரப்பு முடங்கிப் போயுள்ளது.

கடந்த ஏப்ரல் 13. வடபோரரங்கில் ஒரு பாரிய வலிந்த தாக்குதலைச் சிங்களப் படைகள் செய்தன. வன்னிப் போரரங்கில் தற்போது சிங்களப்படை பயன்படுத்தும் சண்டை முறையில் விரக்தியடைந்தே இந்தப் பழைய பாணிப் பெருந் தாக்குதலை அவை நடாத்தின. அதுவும் படுதோல்வி கண்டுவிட்டது.

பழைய தந்திரமும் பலிக்கவில்லை. புதிய வியூகங்களும் எடுபடவில்லை என்ற விரக்தி நிலையில் சிங்களப் படைத்தலைமை உள்ளது. இந்த விரக்தியின் வெளிப்பாடாகச் சிங்களத் தளபதிகளுக்குள் கருத்து மோதல்களும் எழுந்துள்ளன.

இந்த இராணுவச் சூழலிலேயே, தனது பழைய புல்டோசர் திட்டத்தை வடபோரரங் கில் நடைமுறைப்படுத்த முயன்று அதிலும் படுதோல்வி கண்டுள்ளது.

நிலத்தை ஆக்கிரமி- புலிகள் அழிவார்கள் என்றொரு இராணுவச் சித்தாந்தத்தைப் படைத் தரப்பு ஜெயசிக்குறு காலத்தில் வைத்திருந்தது.

புலிகளை அழி- நிலம் கைவசமாகும் என்றொரு புதிய இராணுவச் சித்தாந்தத்தைப் படைத்தரப்பு இப்போது கையிலெடுத்துள்ளது.

படையினரின் இந்தப் போர்த்திட்டங்களுக்கும்- இராணுவக் கோசங்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தலைவர் பிரபாகரன் அவர்கள் மாற்றுத் திட்டங்களையும் புதிய - புதிய முறியடிப்பு வியூகங்களையும் வரைந்து சிங்களப் படைக்குப் பதிலடி கொடுத்து வருகின்றார்.

சிங்களப் படைத்தரப்பின் திட்டங்கள் மெதுமெதுவாகப் புலி வீரர்களால் முடக்கப்பட்டு வருவதால் வன்னிப் போரரங்கம் காட்சி மாற்றம் கண்டுவருகின்றது.

திட்டங்கள் தவிடுபொடியாகியதால் சிங்களப்படை உளவுரன் சிதைந்து திணறுவது ஒருபுறம் நடக்க, மறுபுறத்தில் போரியல் திறனை வெளிப்படுத்தி இராணுவச் சாதனைகள் புரியும் புலிகள் இயக்கத்தின் பல வெளிப்பாடு தமிழ் மக்களுக்கு உற்சாகத்தையும்-மகிழ்ச்சியையும் வழங்கி வருகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

58 ஆம் ஆண்டுக் கலவரத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை எமது இனத்தின் உள்ளங்களில் விதைக்க வேண்டும்: இளங்குமரன்

தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் தாக்கத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை எதிர்வரும் 23 ஆம் நாளில் எமது இனத்தின் உள்ளங்களில் விதைக்க வேண்டும் என்று தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். 1958 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் படுகொலைகளின் 50 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெறவுள்ள நிகழ்வுக்கான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

1958 ஆம் ஆண்டு தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை சிங்களப் பேரினவாதத்தின் கொடுமையின் முதல் பெரும் வெளிப்பாடாக அமைந்தது.

அறப்போட்டம் வழி உரிமை கேட்ட தமிழ் மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன் சிங்களப் பேரினவாதம் கொடுத்த பதில் வன்முறைகளும் படுகொலைகளும் தமிழினத்தை விரட்டியடித்ததும் தான்.

மட்டக்களப்பில் பாணந்துறையைச் சேர்ந்த சிங்கள ஆசிரியை ஒருவர் தமிழர்களால் படுகொலை செய்யப்பட்டார் என வதந்தியைப் பரப்பிய சிங்களப் பேரினவாதிகளும் காடையர்களும் தமிழர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர்.

சிங்களக் காடையர்களுக்கு பண்டாரநாயக்க அரசு முழுமையான ஆதரவினை வழங்கியிருந்தது.

பண்டாரநாயக்க அரசு நினைத்து இருந்தால் அவசரகாலச் சட்டத்தினைப் பயன்படுத்தி, தமிழர்கள் மீதான சிங்களக் காடையர்களின் வன்முறையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். அதனைப் பண்டாரநாயக்க அரசாங்கம் செய்யத் தவறியது. செய்யத் தவறியதுடன் வன்முறையாளருக்கும் துணை போனது.

சிங்களப் பேரினவாத சக்திகளின் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரானது எமது விடுதலைப் போராட்டம். எமது விடுதலைப் போராட்டம் இடையில் முளைத்தது அல்ல.

தமிழிர்களின் நீண்டகால அறவழியிலான போராட்டத்தின் தொடர்ச்சியாகவே ஆயுதப் போராட்டம் அமைந்து இருக்கின்றது. இதற்கு ஈழத் தமிழர்களின் வரலாறு சிங்களப் பேரினவாத சக்திகள் தமிழ் மக்கள் மீது நிகழ்த்திய வன்முறைகள் படுகொலைகள் சாட்சிகளாக உள்ளன.

இந்த வகையில் தான் 50 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர் நிகழ்த்திய படுகொலைகளை இனச் சுத்திகரிப்பை நாம் நினைவுகூர வேண்டும். அதனை எமது இன்றைய தலைமுறையின் உள்ளங்களில் விதைக்க வேண்டும் என்றார் அவர்.
puthinam

கிழக்கு தேர்தலில் மகிந்த அரசாங்கத்தின் "விலை உயர்ந்த" அதிகார முறைகேடுகள்: ஜெகான் பெரேரா

கிழக்கு தேர்தலில் மகிந்த அரசாங்கமானது "விலை உயர்ந்த" அதிகார முறைகேடுகளை மேற்கொண்டது என்று கொழும்பிலிருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" நாளேட்டில் சிறிலங்காவின் சமாதானப் பேரவைத் தலைவர் ஜெகான் பெரேரா எழுதிய கட்டுரையில் சாடியுள்ளார். அதன் தமிழாக்கம்:

கிழக்கில் நடைபெற்று முடிந்த தேர்தல்களின் போது சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடங்கியது முதல் தேர்தல் நடைபெற்ற நாள் வரை சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

தேர்தல் நாளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஒன்று நியாயமானதும், சுதந்திரமானதுமாக நடைபெற்றது என்ற முடிவிற்கு வர முடியாது.

வேட்பாளர்கள் கடும் பாதுகாப்புக்கு மத்தியிலேயே பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில், அதனை சுதந்திரமான ஜனநாயகத் தேர்தலாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் நிலவுகின்றது.

குறிப்பாக பிள்ளையான் குழுவினரின் ஆயுதச் செயற்பாடுகள், ஆயுதம் தரித்த குழு ஒன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டு தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு ஆயுதங்களைப் பயன்படுத்தியமையினால் அதனை சுதந்திரமான தேர்தலாகக் கருத முடியாது.

தேர்தலில் போட்டியிடும் கட்சி ஒன்று ஆயுதங்களின் மூலம் வாக்காளர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் அழுத்தம் கொடுத்தால் அதனை ஜனநாயக முறைமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

உண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சி அரசாங்கத்தின் ஓர் கூட்டணி கட்சியாகவே தேர்தல் களத்தில் குதித்திருந்தது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கபபட்டதாக அரசியல் கட்சிகளும், சுயாதீனக் குழுக்களும் காவல்துறை மற்றும் அதிகாரிகளிடம் பல முறைப்பாடுகளை செய்துள்ளன.

அநேகமான முறைப்பாடுகள் பிள்ளையான் குழுவினரினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களாகவே அமைந்துள்ளன. கிழக்கின் சில பகுதிகளில் சிறு கட்சிகளுக்கு பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் காலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து பவ்ரல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.

"கிழக்கு மாகாணம் முழுவதும் பீதி பரவியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் மோசமான நிலைமை காணப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கை மீட்டெடுக்கும் பணியில் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான் குழுவினர் பல்வேறு அடக்குமுறைகள் மற்றும் அழுத்தங்களை கிழக்கில் பிரயோகித்து வருகின்றனர்.

தேர்தல் காலத்தில் புதிய அபிவிருத்தி திட்டங்களை தொடங்குவதன் மூலம் அரசாங்கம் மக்களை தம்வசப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டது. தேர்தல் விதிகளின்படி புதிய அபிவிருத்தித் திட்டங்கள் தேர்தல் காலத்தில் தொடங்கப்படக் கூடாது.

கிழக்கு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இலக்கு வைத்து சிறிலங்கா அரசாங்கம் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை தொடங்கியது.

மேலும் அரசாங்க ஊடகங்கள் மிக மோசமான வகையில் பிரசார நடவடிக்கைகளுக்கு ஒரு தலைப்பட்சமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆளும் கட்சி அரசியல்வாதிகள் கிழக்கில் தங்கியிருந்து மேற்கொண்ட பிரச்சார நடவடிக்கைகளினால் காவல்துறை மற்றும் அரச அதிகாரிகளுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. சில வாக்களிப்பு நிலையங்களில் தமது பிரதிநிதிகளை நிறுத்துவதற்குக் கூட சில கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை" என பவ்ரல் அமைப்பு தனது கண்காணிப்பு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

பிள்ளையான் குழுவினர் ஆயுதங்களைப் பயன்படுத்தி வாக்காளர்களையும், அரசியல்வாதிகளையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தின் தோழமைக் கட்சியான பிள்ளையான் குழுவினரின் செயற்பாடுகளினால் படையினருக்கு தமது கடமைகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

தேர்தல் நாள் அன்று இடம்பெற்ற அநேகமான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பிள்ளையான் குழு மீதே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் நேரடியாக கிழக்குத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை தேர்தல் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தவல்ல இரண்டாவது ஏதுவாக அமைந்திருந்தது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது அரசாங்கம் மிக மோசமான வகையில் அரச சொத்துக்களையும், உடமைகளையும் முறைகேடாக பயன்படுத்தியது தேர்தல் வெற்றிக்கு ஏதுவான மற்றுமொரு பிரதான காரணியாக நோக்கப்படுகின்றது.

அரசாங்க வாகனங்கள், கட்டடங்கள் மற்றும் பாடசாலைகள் போன்ற அரச சொத்துக்கள் மிக மோசமான வகையில் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பன்படுத்தப்பட்டன. தேர்தல் காலப்பகுதியில் அமைச்சர்கள் பல்வேறு பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து கிழக்கு மக்களை திசை திருப்பும் பணிகளில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தின் இந்தத் தேர்தல் தந்திரோபாயம் சற்று விலை உயர்ந்ததாக அமைந்திருந்த போதிலும், அவர்கள் எதிர்பார்த்த விளைவை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
puthinam

Wednesday, May 14, 2008

JHU opposes granting land, police powers to EPC

TamilNet: 14.05.08 JHU opposes granting land, police powers to EPC: "The all-monks Sinhala Buddhist nationalist party, Jathika Hela Urumaya (JUH), which has 9 seats in the Sri Lankan parliament, has said that it would oppose granting 'internal security and land allocation powers' to the newly elected Eastern Provincial Council (EPC). The All Party Representatives Committee (APRC) has not suggested anything about granting land and police powers to EPC at any stage, said Venerable Ellawela Methanananda Thera, leader of the JHU addressing media on Tuesday in Colombo. He added whether Pillaiyan or Hisbullah comes as chief minister, EPC should take immediate steps to 'resettle all Sinhalese earlier chased out of the province.'"

புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் உறுதியாக உள்ளோம்: சிறிலங்கா அரச தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் இனி போர் நிறுத்த ஒப்பந்தமே செய்து கொள்ளாது என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அந்நாட்டு மக்களிடத்தில் தெரிவித்துள்ள நிலையில் அனைத்துலக அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதில் சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அதே நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒக்ஸ்போர்ட் யூனியனில் மகிந்த ராஜபக்ச நேற்று செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் ஏனைய நாடுகள் கைக்கொண்ட, கையாண்டு வருகின்ற அதே ஜனநாயக வழிமுறைகளையே நாமும் தேர்ந்தெடுத்திருக்கின்றோம்.

எவ்வாறாயினும் விடுதலைப் புலிகளைத் தோல்வியடையச் செய்வதற்கு உலகின் ஆதரவும் தேவைப்படுகின்றது.

புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் நாம் தோல்வியடைவோமானால் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் உலகம் தோல்வியடைந்து விடும்.

எமது நாட்டின் அபிவிருத்தியும் முன்னேற்றமும் பல்வேறு தடைகளைக் கொண்டிருக்கின்றது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில் நாம் பெரும் இழப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது.

எமது படையினர் அப்பாவி மக்களுக்கு தொல்லைகளைக் கொடுக்கவோ அல்லது சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கோ செல்லவில்லை.

புலிகளை வெற்றிகொள்ள முடியாது எனப் பலர் குறிப்பிட்டாலும் அவர்களின் பயங்கரவாதத்திலிருந்து நாம் கிழக்கு மாகாணத்தை விடுவித்துள்ளோம்.

கடந்த வாரம் கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தலை நாம் நீதியாகவும் நேர்மையாகவும் நடத்தியுள்ளோம்.

இதில் பல அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன.

புலிகளைத் தோல்வியடையச் செய்து நிராயுதபாணிகளாக ஆக்குவதற்கு எமது படையினர் முயற்சித்து வருகின்றனர்.

அதேநேரத்தில் இலங்கையில் உள்ள நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வை வழங்கவும் நாம் உறுதியாக உள்ளோம்.

இராணுவத் தீர்வில் நான் நம்பிக்கை கொண்டவன் அல்ல. உண்மையான அரசியல் தீர்வுக்கான அவர்களின் நோக்கம், ஆயுதங்களைக் கைவிடுவதற்கான தயார்நிலை என்பன குறித்து உறுதியளிக்கும் போது நாம் அவர்களுடன் பேசத் தயாராகவே உள்ளோம் என்றார் மகிந்த ராஜபக்ச.

puthinam

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளை தமிழ்மக்கள் நிறைவேற்றியுள்ளனர்: பா.அரியநேத்திரன்

கிழக்கு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வேண்டுகோளை தமிழ் மக்கள் நிறைவேற்றியுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிழக்கு பிரதேச மக்கள் அரசாங்கத்தை இந்த தேர்தலில் தோற்கடித்துள்ளனர். ஆனால், ஜனநாயகத் தேர்தல் என்று கூறிக்கொண்டு சர்வாதிகார தேர்தல் மூலம் கிழக்கு மாகாணத்தில் 61 விழுக்காட்டினர் வாக்களித்ததாக காட்டப்பட்டாலும், உண்மையில் தமிழ் மக்களில் 40 விழுக்காட்டினருக்கும் குறைவானவர்களே வாக்களித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்ட மக்களும், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தொகுதி மக்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்புத் தொகுதி மக்களும் அரசாங்கத்தை முழுமையாக நிராகரித்துள்ளனர்.

பட்டிருப்புத் தொகுதியில் வெற்றிலையில் போட்டியிட்டவர்களுக்கு 14,379 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

அதேவேளை அரசுக்கு எதிராகப் போட்டியிட்ட ஏனைய கட்சிகளுக்கு 13,900 வாக்குகள் கிடைக்கப்பெற்றன. இதன்படி பட்டிருப்புத் தொகுதியில் 3,000 வாக்குகளால் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.

இதனைவிட பட்டிருப்புத் தொகுதி தனித்தமிழர்களின் தொகுதியாகும். இந்தத் தொகுதியில் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் ஆளும் தரப்பில் இருந்தோ, எதிர்தரப்பில் இருந்தோ கிழக்கு தேர்தலில் எந்த ஒரு உறுப்பினரும் தெரிவு செய்யப்படவில்லை.

இதன் மூலம் பட்டிருப்புத் தொகுதி வாழ் தமிழ் மக்கள் கிழக்கு சபையை முழுமையாக நிராகரித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.

எனவே, இந்தத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய எமது வேண்டுகோளை ஏற்று அரசுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை இந்த தேர்தல் புள்ளி விபரங்கள் தெளிவாகக் காட்டுவதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

puthinam

மன்னாரில் இருவரைக் காணவில்லை

மன்னார் முருங்கனைச் சேர்ந்த இருவர் காணாமல் போய் உள்ளதாக அவர்களின் உறவிர்கள் மன்னார் சுகவாழ்வு மன்றத்திலும், மன்னார் குடிமக்கள் குழுவிலும் முறையிட்டுள்ளனர்.

காணாமல் போனோர் செபஸ்தியான் (வயது 44), எம்.ஏ.சிராஜூதீன் (வயது 52) ஆகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை (07.05.08) முருங்கன்பிட்டி என்ற இடத்திலிருந்து காலை 6:00 மணியளவில் ஈருளியில் சென்று கொண்டிருந்த போதே காணாமல் போய் உள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

puthianm

"தேசிய சுதந்திர முன்னணி"- புதிய கட்சியை தொடங்கினார் விமல்

ஜே.வி.பி. அதிருப்திக் குழுவைச் சேர்ந்த விமல் வீரவன்ச தலைமையிலான சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்புரிமை கொண்ட குழுவினர் இன்று காலை "தேசிய சுதந்திர முன்னணி" என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.

இக்கட்சியின் தலைவராக விமல் வீரவன்சவும் செயலாளராக ஜே.வி.பியிலிருந்து ஏற்கனவே பிரிந்து சென்று அரசுடன் இணைந்திருந்த நந்தன குணதிலக்கவும் செயற்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திரக் குறியீடு கட்சியின் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க நினைவான அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் 9:45 மணியளவில் நிகழ்வுகள் தொடங்கின.

இந்நிகழ்வில் விமல் வீரவன்ச தலைமையிலான புதிய கட்சி தொடங்கி வைக்கப்பட்டது.

பின்னர் கட்சிப் பிரதிநிதிகளின் முதலாவது மாநாடு நடைபெற்றது.

"தேசிய சுதந்திர முன்னணி"யில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

இந்நிகழ்வுக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் விமல் வீரவன்ச கூறியதாவது:

நாடு சுதந்திரமடைந்து 60 வருடங்கள் கடந்துள்ள போதும் நாட்டில் உள்ள மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை.

அத்தகைய சுதந்திரத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவே ஜே.வி.பி. உருவாக்கப்பட்டது. ஆனால் ஜே.வி.பி. தலைமை மக்களின் பிரச்சினையைத் தீர்க்கத் தவறியதுடன் கட்சியின் இலக்குகளை அடைவதிலும் தோல்வி கண்டுள்ளது. கிழக்குத் தேர்தலிலும் தோல்வி கண்டுள்ளது.

புதியதொரு அரசியல் நடவடிக்கையை நாம் மேற்கொள்ளவிருக்கிறோம். ஜே.வி.பியால் சாதிக்க முடியாமல் போன விடயங்களை புதிய கட்சி சாதிக்கும். ஆனால் ஜே.வி.பிக்கு போட்டியாக எமது கட்சி இயங்காது. எமது எழுச்சியைக் கண்டு இன்று பலர் அஞ்சி நடுங்குகின்றனர்.

ஜே.வி.பி. தலைமையின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் வரும் என நாம் நம்பவில்லை.

காலையில் ஐக்கிய தேசியக் கட்சி கூறும் ஒரு விடயத்தை மாலையில் ஜே.வி.பியினர் கூறுகின்றனர். எமது புதிய கட்சி கைதியைப் போன்றல்லாது சுதந்திரமாகச் செயற்படும். எமது கட்சியுடன் யாரும் இணைந்து கொள்ள முடியும். அதேபோல் விரும்பினால் கட்சியிலிருந்து வெளியேறவும் முடியும்.

கொசோவா, சூடான் போன்ற இடங்களில் பிரிவினையை ஏற்படுத்திய அமெரிக்கா இன்று இலங்கையிலும் புலிகளைப் பயன்படுத்தி பிரிவினையை ஏற்படுத்த முனைகிறது.

நாட்டில் உள்ள பிரதான கட்சிகளுக்கு முக்கிய சவாலாக விளங்க வேண்டிய கட்சியாக ஜே.வி.பி. திகழ்ந்தது. ஆனால் அக்கட்சி அப்பணியைச் செய்யவில்லை.

"தேசிய சுதந்திர முன்னணி" அப்பணியைச் செய்யும். அப்பணியைச் செய்வதில் உள்ள சவால்கள் குறித்து எமக்கு நன்கு தெரியும். இருப்பினும் அப்பணியில் நாம் வெற்றிபெறுவோம் என்றார்.

கட்சியின் தொடக்க நிகழ்வில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளே பிரதம அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.

puthianm

கிழக்குத் தேர்தல் முடிவை எதிர்த்து நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்: ஐ.தே.க.

இலங்கையின் கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தியிருந்த தேர்தலின் முடிவுகளை எதிர்த்து கொழும்பில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது.

கொழும்பில் அக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியதாவது:

கிழக்கு மக்களின் வாக்களிக்கும் சுதந்திரத்தை மகிந்த அரசாங்கம் அடியோடு பறித்திருக்கின்றது. இதனை மறைப்பதற்கு முற்படும் அரசாங்கம், இந்த தேர்தலில் மிகவும் கீழ்த்தரமாகவே செயற்பட்டுள்ளது.

துணைப் படைக்குழுவை தேர்தலில் வெற்றியடையச் செய்யவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியுடன் இருந்தது.

அரசாங்கத்தினால் கிழக்குப் பிரதேசத்துக்கு அடியாட்களும் சண்டியர்களும் அழைத்துச் செல்லப்பட்டே மக்களின் வாக்களிக்கும் சுதந்திரம் பறிக்கப்பட்டது.

கிழக்குத் தேர்தலை முறையாக நடத்துவதற்கு ஆவன செய்யுமாறு தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டும் அவர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிவிட்டார்.

இந்தத் தேர்தலில் அரச சொத்துக்கள் தேர்தல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. கிழக்குத் தேர்தலில் மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் நாடாளுமன்றத்திற்கு வராமல் தடுப்பதற்காகவே நாடாளுமன்றத்தை மகிந்த ஒத்திவைத்தார்.

அரசின் இந்தத் திட்டமிட்ட முறைகேடுகளை கண்டித்து நாடாளாவிய ரீதியில் நாளை மறுநாள் முதல் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவிருக்கின்றோம்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றும். ம