Friday, June 13, 2008

வவுனியாவில் படையினரின் காவலரண் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

வவுனியா - மதவாச்சி வீதியில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண் மீது இன்று முற்பகல் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

வவுனியா - மதவாச்சி வீதியில் பறையனாலங்குளத்தில் உள்ள காவலரணே இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:45 மணியளவில் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் அதில் இருந்த படையினர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பறையனாலங்குளம் காட்டுப்பகுதி ஊடாக வந்த விடுதலைப் புலிகளின் சிறிய தாக்குதல் அணியே இத்தாக்குதலை ரி-56 ரக துப்பாக்கியால் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தையடுத்து பறையனாலங்குளம் காட்டுப்பகுதியில் தீவிர தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன.
puthinam

0 comments: