சிறிலங்கா அரசாங்கம் நேற்று நள்ளிரவு இரண்டு மாகாண சபைகளை ஒரே நேரத்தில் கலைத்துள்ளது.
வட மத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாண சபைகளையே நேற்று நள்ளிரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கலைக்கும் உத்தரவை அரசுத் தலைமை வெளியிட்டுள்ளது.
மேற்படி இரண்டு மாகாண சபைகளையும் கலைக்குமாறு அந்தந்த மாகாண சபை ஆளுநர்களுக்கு அரச தலைமை அறிவித்ததையடுத்தே மாகாண சபைகள் கலைக்கப்பட்டதாக மேற்படி மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
மேற்படி இரண்டு மாகாண சபைகள் கலைக்கப்பட்டமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் கலைக்கப்பட்ட இந்த மாகாண சபைகளுக்கு எதிர்வரும் 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும்.
மேற்படி இரண்டு மாகாண சபைகளும் கலைக்கப்பட்டதையடுத்து அவற்றின் முதலமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை மேற்படி இரண்டு மாகாண சபைகளினதும் காலம் அடுத்த வருடமே முடிவடையும் நிலையில் சுமார் ஒரு வட்டத்திற்கு முன்னதாக அவை கலைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
puthinam
0 comments:
Post a Comment