மன்னார் தீவில் உள்ள எருக்கலம்பிட்டி சிறிலங்கா கடற்படையினரின் கூட்டுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணியினரால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதில் 10 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான படையினர் காயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:
கடந்த மாதம் வீரச்சாவடைந்த கடற்புலிகளின் சிறப்பு இயந்திரப் பொறியியலாளரான லெப். கேணல் கடாபி நினைவாக கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணியினரால் இன்று புதன்கிழமை அதிகாலை 2:08 மணிக்கு எருக்கலம்பிட்டி சிறிலங்கா கடற்படையின் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் தளம் 10 நிமிடத்தில் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணியினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இதில் 10 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவிலான படையினர் காயமடைந்துள்ளனர்.
மன்னார் தீவின் நடுவில் பெரும் பாதுகாப்புக்களின் மத்தியில் எருக்கலம்பிட்டி கடற்படைத்தளம் உள்ளது.
இத்தாக்குதலின் போது
50 கலிபர் துப்பாக்கிகள் - 02
81 மில்லி மீற்றர் மோட்டார்கள் - 02
பிகே எல்எம்ஜி - 02
ஆர்பிஜி-01
60 மில்லிமீற்றர் மோட்டர்கள் - 02
ஏகேஎல்எம்ஜி - 01
ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 03
ராடார் - 01
லோ உள்ளிட்ட பெரும் தொகையான வெடிபொருட்கள் கடற்புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.puthinam
0 comments:
Post a Comment