Thursday, December 29, 2011
உன்னதமானவன் திரைப்படத்தின் ஓடியோ வெளியீடு
தமிழ் திரையுலகில் பிரபா, வர்ஷினி நடித்துள்ள உன்னதமானவன் திரைப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குனர் எஸ்.வி.சந்திர சேகர் கலந்துகொண்டார்.
தமிழ் திரையுலகில் மதுரையை வைத்து நிறைய திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றாலும் புதுமுகங்கள் நடித்துள்ள உன்னதமானவன் திரைப்படம் வெற்றியடையும் என்ற எதிர்ப்பார்ப்பு கொலிவுட்டில் எழுந்துள்ளது.
உன்னதமானவன் திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபாவும், கதாநாயகியாக வர்ஷினியும் நடித்துள்ளார்கள். இவர்களுடன் புதுமுகம் ஐஸ்வர்யா, கஞ்சா கருப்பு, ஜெயப்பிரகாஷ், மனோபாலா, சிங்கம் புலி, பருத்தி வீரன் வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
உன்னதமானவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனை கதாநாயகி காதலிக்கிறாள். அவளுடைய காதல் வெற்றி அடைந்ததா? நாயகன் எவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டான் என்ற விடயங்களே படத்தின் திரைக்கதையாகும்.
இத்திரைப்படத்தின் கதாநாயகனான பிரபா மனநலம் பாதிக்கப்பட்ட கதாப்பாத்திரத்திற்காக 3 மாதங்கள் தாடி வளர்த்து தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மதுரை மாவட்டம் சின்னாலம் பட்டியின் நடந்த திருவிழா படப்பிடிப்பின் போது கிழிந்த சட்டையுடன் நடித்துக்கொண்டிருந்த கதாநாயகன் இளைப்பாற கோயிலில் அமர்ந்திருக்கிறார். அப்பொழுது மக்கள் உண்மையான பைத்தியக்காரன் என்று நினைத்து நாயகனுக்கு காசு போட்டுள்ளனர்.
இந்த விடயத்தை நாயகன் இயக்குனரிடம் சொல்ல, இயக்குனர் இது கதாப்பாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று பாராட்டியுள்ளார்.
Sunday, April 17, 2011
Friday, April 15, 2011
மாப்பிள்ளை திரைப்படம் ( mappillai tamil movie)
Directed by: Suraj
Produced by: Nemichand Jhabak
Hitesh Jhabak
Starring: Danush
Manisha Koirala
Hansika Motwani
Vivek
Music by Mani Sharma
Cinematography S. R. Sathish Kumar
Editing by T. Kishore
Distributed by Sun Pictures
Release date(s) April 8, 2011
Wednesday, March 30, 2011
என்திரன் திரைப்பட பாடல்கள் ( Enthiran Songs)

Endhiran (2010)
Actors :Rajanikanth, Aishwarya Rai
Director : S. Shankar
Music Director : A.R. Rahman
Producer : Kalanidhi Maran
Friday, September 24, 2010
மறைந்த நடிகர் முரளிக்கு நடிகர் சங்கம் அஞ்சலி கூட்டம்

1984 ஆம் ஆண்டு ‘பூ விலங்கு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆர்பாட்டமில்லாத தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்ததோடு, தனக்கென ரசிகர் வட்டத்தையும் பெற்றிருந்தார்.
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற கதாநாயகர்களில் ஒருவராக விளங்கிய முரளி, கடந்த 8.9.2010 அன்று எதிர்பாராதவிதமாக அவர் இயற்கை எய்தினார்.
அவருடைய நினைவை போற்றும் வகையில், வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு, நடிகர் சங்கத்தில் அமைந்துள்ள சாமி சங்கரதாஸ் கலையரங்கில் நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, கில்டு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் என தமிழ் திரையுலக அனைத்து பிரிவினரும் கலந்துகொள்கிறார்கள்.
Friday, September 10, 2010
சென்னையில் 30 தியேட்டர்களில் எந்திரன் ரிலீஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம், சென்னையில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
இன்று வியாழக்கிழமை எந்திரன் படம் சென்னையில் வெளியாகும் திரையரங்குகள் உள்ளிட்ட விவரங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
சத்யம் (3), தேவி (2), எஸ்கேப் சினிமாஸ் (3), ஐநாக்ஸ் (2), அபிராமி (4), சங்கம் (2), ஆல்பட் (2), உதயம் (3), கமலா (2), பிவிஆர் (5), ஐட்ரீம், மகாராணி ஆகிய திரையரங்குகளில் எந்திரன் வெளியாகி்றது. இவை அனைத்தும் சென்னை நகர எல்லைக்குட்பட்ட திரையரங்குகள்.
காசி, பிருந்தா, தியாகராஜா, தேவி கருமாரி, மாயாஜால், பிரார்த்தனா, ராக்கி போன்ற திரையரங்குகள் சென்னை நகர எல்லைக்குள் வராதவை. புறநகர்ப் பகுதியில் மட்டும் 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் எந்திரனைக் காணலாம். 10 ஸ்கிரீன்கள் கொண்ட மாயாஜாலில் நாளொன்றுக்கு 60 காட்சிகளுக்கும் மேல் எந்திரன் திரையிடப்படுகிறது.
நாளை மறுதினம் (செப் 11) படத்தின் அதிரடியான முன்னோட்டக் காட்சிகள் வெளியிடப்படுகிறது. இதனை சத்யம் திரையரங்கில் வைத்து ஒரு தனி விழாவாகவே நடத்துகிறார்கள். அதே நேரம் அம்பத்தூர் ராக்கி, கேகே நகர் காசி திரையரங்குகளிலும் ட்ரைலர் வெளியாகிறது.
இதற்கிடையே, எந்திரன் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிவுக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிகிறது. இன்னும் ஓரிரு நாள் பணிகள் மட்டுமே மிச்சம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் அனைத்து ஏரியாக்களும் படு பரபரப்பாக விற்றுத் தீர்ந்துள்ளன. இன்றைய நிலையில் எந்திரன் விற்பனை மட்டுமே பல நூறு கோடிகளைத் தாண்டியுள்ளது. அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளிவரும்போது, இந்தியத் திரையுலகமே பிரமித்துப் போகும் என்கிறார் எந்திரன் யூனிட்டைச் சேர்ந்த முக்கிய டெக்னீஷியன் ஒருவர்.
படம் வெளியாகும் முன்பே எந்திரனுக்கு இந்திய திரையுலகில் கிடைத்திருக்கும் முக்கியத்துவம், சர்வதேச அளவிலான வெளியீடு, ஆடியோ விற்பனை சாதனை போன்றவற்றை மையமாக வைத்து, இந்தியாவின் அவதார் என வர்ணித்து சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியுள்ளது பிரபல டிவி சேனல். அதில் எந்திரன் மூலம் ரூ 1,600 கோடிக்கும் மேல் வசூல் குவியும் என புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து வெளியாகும் ஒரு படத்துக்கு இத்தனை எதிர்ப்பார்ப்பும், விற்பனையும் அமைகிறதென்றால் அதற்கு ஷங்கர் யூனிட்டின் கூட்டு முயற்சியும் ஒரு காரணம் என்றாலும், ரஜினி என்ற ஒற்றை மனிதரால் மட்டுமே இது சாத்தியமாகிறது. இந்திய சினிமா சரித்திரம் காணாத சாதனை இது என்று அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளனர்.

